தேவாலயத்தில் தகராறு - அண்ணாமலை மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு

BJP Aannamalai

BJP Aannamalai

பொது அமைதிக்கு குந்தகம் விளைவிப்பதாக கூறி அண்ணாமலை மீது வழக்கு

பொது அமைதிக்கு குந்தகம் விளைவிப்பதாக கூறி பாஜக தலைவர் அண்ணாமலை மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு ’என் மண், என் மக்கள்’ நடைப்பயணத்தை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தொடங்கினார். அதன்படி தமிழகத்தின் சில பகுதிகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் அண்ணாமலை மக்களை சந்தித்தும் பேசி வருகிறார். அந்த வகையில் கடந்த 8ம் தேதி தர்மபுரி மாவட்டத்திற்கு என் மண் என் மக்கள் சுற்றுப்பயணத்தை அண்ணாமலை மேற்கொண்டார். அப்போது பி. பள்ளிபட்டிக்கு சென்ற அண்ணாமலை அங்குள்ள வரலாற்று சிறப்புமிக்க லூர்து அன்னை மாதா ஆலயத்துக்கு சென்றார். உடனே, அண்ணாமலையை தடுத்து நிறுத்திய அப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள், அவர் தேவாலயத்துக்கு வரக்கூடாது என்று தடுத்தது. அண்ணாமலை மாதா சிலைக்கு மாலை அணிவிக்கவும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், ஆலயத்தில் இருந்து அண்ணாமலை வெளியேறுமாறும் வலியுறுத்தினர்.

தனக்கு எதிர்ப்பு தெரிவிப்பதற்கான காரணம் குறித்து கேட்டப்போது, கடந்த ஆண்டு மணிப்பூரில் நடந்த கலவரம் குறித்தும், அதில் இரு பெண்களை துன்புறுத்தப்பட்டது குறித்தும் அந்த இளைஞர்கள் கேள்வி எழுப்பினர். அதனால் அண்ணாமலைக்கும், அந்த பகுதி மக்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது பேசிய அண்ணாமலை மணிப்பூரில் நடந்தது இரு பிரிவினர் இடையே ஏற்பட்ட தகராறு என்றும், அதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்றும் எடுத்து கூறினார்.

மேலும், தேவாலயத்துக்கு வர அனைவரும் உரிமை உள்ளது என்ற அண்ணாமலை, ஆலயம் உங்கள் பெயரில் உள்ளதா? என்று தான்னை தடுத்து நிறுத்தியவர்களை பார்த்து கேள்வி எழுப்பினார். இதனால் இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியது. அப்போது சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், அண்ணாமலையிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட இளைஞர்களை தடுத்து வெளியேற்றினர். அதன்பின்னர், தேவாலயத்துக்குள் சென்ற அண்ணாமலை மாதா சிலைக்கு மாலை அணிவித்து வணங்கினார். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த நிலையில் அந்த சம்பவம் தொடர்பாக அண்ணாமலை மீது பொம்மிடி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். கார்த்திக் என்பவர் கொடுத்த புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்ட போலீசார் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிப்பதாக கூறி 153 (A) (a), 504, 505(2) ஆகிய 3 பிரிவுகளின் கீழ் அண்ணாமலை மீது வழக்குப்பதிவு செய்தனர்.

Tags

Next Story