ஒரு பைசா கூட மத்திய அரசு நிவாரணம் தரவில்லை -கனிமொழி

ஒரு பைசா கூட மத்திய அரசு நிவாரணம் தரவில்லை -கனிமொழி

 தென்மாவட்ட மழை பாதிப்புகளுக்காக இதுவரை ஒரு பைசா கூட மத்திய அரசு நிவாரணம் தரவில்லை என திமுக., எம்பி., கனிமொழி கூறினார். 

தென்மாவட்ட மழை பாதிப்புகளுக்காக இதுவரை ஒரு பைசா கூட மத்திய அரசு நிவாரணம் தரவில்லை என திமுக., எம்பி., கனிமொழி கூறினார்.

தென்மாவட்ட மழை பாதிப்புகளுக்காக இதுவரை ஒரு பைசா கூட மத்திய அரசு நிவாரணம் தரவில்லை என்றும், தமிழ்நாட்டுக்கு எதையுமே செய்யக்கூடாது என்ற மனநிலையில் அவர்கள் உள்ளதாகவும் எம்பி கனிமொழி தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற தேர்தலுக்காக திமுகவின் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவினர் எம்பி கனிமொழி தலைமையில் மதுரையில் முகாமிட்டு நேரில் பரிந்துரை மனுக்களை பெற்றனர். மதுரை பாண்டிகோவில் அருகேயுள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்ற கூட்டத்தில் மதுரை, சிவகங்கை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களை சேர்ந்த கட்சி நிர்வாகிகள், வணிகர் சங்கங்கள், விவசாயிகள், தொழில் முனைவோர், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் பங்கேற்று தங்கள் கோரிக்கைகளை அளித்தனர்.

கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த எம்பி கனிமொழி கூறுகையில், "ஜி.எஸ்.டி வரிவிதிப்பு முறையால் சிறு குறு தொழில் நிறுவனத்திற்கு ஏற்பட்ட பதிப்புகளை சரிசெய்வது, ரயில்வே துறையில் தென் மாநிலங்களுக்கு குறைவான நிதி ஒதுக்கப்படுவது, 100 நாள் வேலை திட்டத்தில் முறையாக சம்பளம் வராமல் உள்ள குளறுபடிகள் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்த கோரிக்கைகள் பிரதானமாக வரப்பெற்றுள்ளன. மத்திய பாஜக அரசு கடந்த தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகளையே இதுவரை நிறைவேற்றவில்லை. வங்கி கணக்கில் 15 லட்சம் ரூபாய் வரவு வைப்பதாக சொன்னது இதுவரை நடக்கவில்லை, விவசாயிகளுக்கு தருவதாக சொன்ன உதவி தொகை குறைகிறது, ரயில்வே துறையில் தென் மாநில நிதி குறைந்துள்ளது, கல்விக்கான நிதி குறைகிறது, பெண்களுக்கான இட ஒதுக்கீடு நடைமுறைக்கு வரவில்லை. இப்படிப்பட்ட ஒன்றிய அரசுடன் தான் பயணிக்க வேண்டிய அவலமான சூழல் உள்ளது.

சென்னை, தென்மாவட்டங்களில் ஏற்பட்ட மழை வெள்ள பாதிப்புகளுக்கு இன்று வரை தரப்பட்டுள்ள நிவாரணம் அனைத்தும் மாநில அரசு தந்தது. மத்திய அரசு எந்த நிதியும் தரவில்லை. மத்திய அரசிலிருந்து மூத்த அமைச்சர்கள் இருவர் சென்னை, தென் மாவட்டங்களை ஆய்வு செய்துள்ளனர், கண்காணிப்பு குழு மூன்று முறை ஆய்வு செய்துள்ளது. ஆனால், இதுவரை ஒரு பைசா கூட நிவாரணம் வரவில்லை. தமிழ்நாட்டுக்கு எதையுமே செய்ய கூடாது என்ற மனநிலையில் தான் அவர்கள் உள்ளார்கள்" என்றார்

Tags

Next Story