போதைப்பொருட்களின் புழக்கத்துக்கு மத்திய அரசே காரணம்

போதைப்பொருட்களின் புழக்கத்துக்கு மத்திய அரசே காரணம்

இந்தியாவில் போதைப்பொருட்களின் புழக்கத்துக்கு முழு காரணம் மத்திய அரசு தான், என மாநில காங்., கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை குற்றஞ்சாட்டியுள்ளார். 

இந்தியாவில் போதைப்பொருட்களின் புழக்கத்துக்கு முழு காரணம் மத்திய அரசு தான், என மாநில காங்., கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை குற்றஞ்சாட்டியுள்ளார்.

சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி வாகைகுளம் விமான நிலையம் வருகை தந்த காங்கிரஸ் கட்சி மாநில தலைவர் செல்வப் பெருந்தகை தூத்துக்குடி மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் வாகைக்குளம் விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் கட்சி மாநில தலைவர் செல்வ பெருந்தகை எம்எல்ஏ அப்போது அவர் பேசும்போது வெள்ள நிவாரணமாக ஒரு பைசா கொடுக்காத பிரதமர் மோடி இன்று தமிழ்நாட்டிற்கு வாக்கு சேகரிக்க வருகிறார்.

தமிழ்நாட்டு மக்கள் ஏமாளியாக இருப்பார்கள் என்று அவர் வட மாநில மக்களை ஏமாற்றியது போல தமிழ்நாட்டு மக்களை ஏமாற்றலாம் என்று வந்திருக்கிறார். ஒருபோதும் தமிழ்நாட்டு மக்கள் ஏமாற மாட்டார்கள் அவருக்கு தேர்தலில் மிகப்பெரிய தீர்ப்பை கொடுப்பார்கள் என்றார். பாஜக முதல் கட்ட வேட்பாளர் பட்டியல் அறிவித்ததில், பாஜக வேட்பாளர்கள் தோல்வி பயம் கண்டுள்ளனர். தேர்தலில் போட்டியிட மாட்டேன் என்று பயந்து ஓடுகின்றனர். என்ற அவர் 400 தொகுதிக்கு மேல் இந்தியா கூட்டணி அபார வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என நம்பிக்கை தெரிவித்தார். மேலும் திமுக கூட்டணியில் உறுதியாக இருக்கிறோம். நாங்கள் சுமூகமாக இருக்கிறோம் அதிமுக கூட்டணியில் காங்கிரஸ் இருக்க வேண்டும் என்பது அதிமுகவினரின் விருப்பம் .

நாங்கள் ஐந்து தேர்தலில் திமுகவுடன் கூட்டணியில் இருக்கிறோம் . திமுக காங்கிரஸ் உறவு நம்பிக்கையான உறவாக இருக்கிறது. எங்களை ஒருபோதும் திமுக தலைவர் ஸ்டாலின் குறைத்து மதிப்பிட மாட்டார் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது என்றார். பாஜக ஆட்சியில் போதை பொருள் எல்லா மாநிலங்களிலும் தாராளமாக கிடைக்கிறது. பாஜக அரசு போதை பொருளை கட்டுப்படுத்த தவறிவிட்டது. பிரதமர் கையில் தான் ரா பிரிவு, உளவுத்துறை, மற்றும் விமானம் கப்பல் போக்குவரத்து ரயில்வே துறைமுகங்கள் உள்ளிட்ட அனைத்து துறைகளும் அவர்கள் கையில் தான் உள்ளது ஆகையினால் பிரதமர் போதை பொருளை கட்டுப்படுத்த தவறிவிட்டார் என குற்றம் சாட்டினார்.

மேலும் பிரதமர் மோடி 2 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு தருவேன் என்றார் செய்தாரா? பெட்ரோல் விலை பாதியாக கிடைக்கும் என்றார் செய்தாரா? இந்தியாவின் பண மதிப்பு அமெரிக்காவில் பணமதிப்பிற்கு நிகராக்குவேன் என்றார் செய்தாரா? பிரதமர் மோடி ஒன்பது ஆண்டுகாலமாக தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றினாரா என்பதை சொல்ல வேண்டும்‌ இது குறித்து வெள்ளை அறிக்கை கொடுக்க வேண்டும் ஊழலைப் பற்றி பேச பாஜகவிற்கு எந்த தகுதியும் கிடையாது என செல்வ பெருந்தகை தெரிவித்தார். பேட்டி; செல்வப் பெருந்தகை தலைவர்

Tags

Next Story