நாமக்கல்லில் விரைவில் மத்திய அரசின் மருத்துவ மதிப்பீட்டு சுற்றுலா மண்டலம்
நாமக்கல்லில் விரைவில் மத்திய அரசின் மருத்துவ மதிப்பீட்டு சுற்றுலா மண்டலம் என பாஜக மத்திய அரசு திட்டங்கள் பிரிவு மாநில துணைத் தலைவர் நாமக்கல் லோகேந்திரன் தெரிவித்துள்ளார்
நாமக்கல் மாவட்டத்தில் மத்திய அரசின் சார்பில், விரைவில் மருத்துவ மதிப்பீட்டு சுற்றுலா மண்டலம் அமைக்கப்படும் என பாஜக மத்திய அரசு திட்டங்கள் பிரிவு மாநில துணைத் தலைவர் நாமக்கல் லோகேந்திரன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:- மத்திய அரசின் சுற்றுலா அமைச்சகத்தின்கீழ் இயங்கும், சுற்றுலா மற்றும் பயண மேலாண்மை நிறுவனம் (ஐஐடிடிஎம்), நாமக்கல் மாவட்டத்தை மருத்துவ மதிப்பீட்டு சுற்றுலா மண்டலமாக உயர்த்திட தொடர்ந்து பல்வேறு ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு வருகிறது. வரும் 2024-ம் ஆண்டு ஜனவரி மாதத்திற்குள் ஆராய்ச்சி பணிகள் நிறைவடையும்.
அதன் பின்னர் மத்திய மாநில அரசுகளுக்கு, நாமக்கல் மாவட்டத்தில் மையம் அமைப்பதற்கான அறிக்கைகளை இந்திய அரசின் சுற்றுலா மற்றும் பயண மேலாண்மை நிறுவனம் சமர்ப்பிக்கும். மருத்துவ மதிப்பீட்டு சுற்றுலா மையத்துடன் தொடர்புடைய நடவடிக்கைகளை விரைவாக முன்னெடுப்பதில், மத்திய சுற்றுலா துறை அமைச்சரின் அர்ப்பணிப்பு முயற்சிகளுக்கு பாஜக சார்பில், எங்களது நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
நாமக்கல் மாவட்டத்தில் பாரத் கேர் டிரஸ்ட் மூலம் மருத்துவ சுற்றுலா மண்டலம் மற்றும் திட்டத்தின் கட்டமைப்பில்,ஐஐடிடிஎம் மற்றும் மத்திய அரசிற்கு முழு ஒத்துழைப்பு அளித்து வருகின்றோம். நாமக்கல் மாவட்டத்தில் மருத்துவ மதிப்பீட்டு சுற்றுலா மண்டலம் அமைப்பதற்கு முக்கியப் பங்காற்றி வரும்,ஐஐடிடிஎம் நோடல் அதிகாரி டாக்டர் மோனிகா பிரகாஷ், மற்றும் மத்திய அரசின் ஐஐடிடிஎம் இயக்குநர் அலோக் ஷர்மா ஆகியோருக்கு பாஜக சார்பில் பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.