கொங்கு மண்டலத்தில் ஸ்டாலினின் ரிமோட் ஆப்ரேஷன் - பதவி பறிபோகுமா..?

கொங்கு மண்டலத்தில் ஸ்டாலினின் ரிமோட் ஆப்ரேஷன் - பதவி பறிபோகுமா..?

கொங்குமண்டலத்தை டார்கெட் செய்த ஸ்டாலின்

கொங்கு மண்டலத்தில் திமுக நிர்வாகிகளுக்குள் கோஷ்டி மோதல் ஏற்பட்டதால் முதலமைச்சர் ஸ்டாலின், ரிமோட் ஆப்ரேஷனை கையில் எடுத்துள்ளார்.

சென்னை கொங்கு மண்டலத்தில் திமுக நிர்வாகிகளுக்குள் குழப்பம் ஏற்பட்டுள்ளதால் களத்தில் நேரடியாக இறங்கிய முதலமைச்சர் ஸ்டாலின், நலத்திட்டங்கள் மூலம் ரிமோட் ஆப்ரேஷனை சைலண்ட் மோடில் செய்து வருகிறார்.

நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் 39 தொகுதிகளையும் டார்கெட் செய்துள்ள திமுக தலைமை, தீவிரமாக செயல்பட்டு வருகிறது. மக்களை சந்தித்து திண்ணை பிரச்சாரம் செய்ய வேண்டும் என்று கட்சி நிர்வாகிகளுக்கு உத்தரவிட்ட முதலமைச்சர், ஒவ்வொரு வாக்காளர்களுக்கும் செல்போனில் தொடர்பு கொண்டு நீங்கள் நலமா என கேட்கும் திட்டத்தையும் அறிமுகம் செய்தார்.

தேர்தலில் பாஜக மற்றும் அதிமுகவுக்கு வாய்ப்புகளை வழங்கிட கூடாது என தீவிரம் காட்டி வரும் முதலமைச்சர் ஸ்டாலினின் கவனம் முழுவதும் கொங்குமண்டலத்தில் உள்ளது. அதிமுகவின் பலமாக பார்க்கப்படும் கொங்குமண்டலம் திமுகவுக்கு சவாலான தொகுதிகள். இதனால், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், கோவை, ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் ஆயிரம் ரூபாய் கோடிகளில் நலத்திட்டங்களை அறிவித்து கொங்கு மண்டலத்தில் திமுகவுக்கு இருக்கும் பலகீனத்தை சரிக்கட்ட முயற்சித்து வருகிறார்.

இப்படி கொங்கு மண்டல மாவட்டங்களுக்கு என தனித்திட்டங்களை அறிவித்து மக்களை தங்கள் பக்கம் இழுக்க முயன்றாலும், கட்சிக்குள் இருக்கும் சில நிர்வாகிகளால் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு தலைவலி தான் அதிகரித்துள்ளது என்று திமுக வட்டாரத்தில் கூறப்படுகிறது. அதற்கு கோவை, நாமக்கல், திருப்பூர், நீலகிரி , தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் திமுக கட்சிக்குள் உட்கட்சி பூசல் நிலவி வருவதே காரணமாம். தேர்தலில் யாரை நிறுத்தினாலும், அவர்களுக்குள் இருக்கும் போட்டி, பொறாமலையால் திமுக வெற்றி வாய்ப்பை இழக்கும் என்பதே ஸ்டாலினின் கவலையாக உள்ளது.

இந்த நிலையில் பொள்ளாச்சியில் நடந்த நலத்திட்ட நிகழ்ச்சியில் பங்கேற்ற முதலமைச்சர் ஸ்டாலின் புதிய பிரச்சார யுக்தியை கையிலெடுத்துள்ளார். கொங்குமண்டலத்திற்கு விசிட் அடுத்த முதல்வர், கட்சி நிர்வாகிகளை அழைத்து பேசியுள்ளார். தேர்தலில் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்றதுடன், கோஷ்டி பிரச்சனைக்கு பஞ்சாயத்தும் செய்து வைத்துள்ளார்.

இதில் குறிப்பாக கரூர் பகுதிகளை கவனித்து வந்த செந்தில் பாலாஜி சிறைக்கு சென்றதால், கோவை உள்ளிட்ட பகுதிகளில் திமுக கட்சியினரை ஒருங்கிணைப்பத்தில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஏற்கெனவே கோவை பாஜகவின் பலமாக மெல்ல மெல்ல மாறி வருகிறது. செந்தில் பாலாஜி சிறை சென்றதால் அவரின் பொறுப்பில் இருந்த திமுக தொகுதிகளின் கண்காணிப்பு ஈரோடு அமைச்சர் முத்துச்சாமியிடம் ஒப்படைக்கப்பட்டது. இதேபோல் திருப்பூர், நீலகிரி, நாமக்கல் பகுதிகளில் அமைச்சர்களின் விசுவாசிகளுக்கு இடையே கோஷ்டி பூசல் ஏற்பட்டு, முதலமைச்சர் ஸ்டாலின் ஆதரவாளர்கள் ஒரு பக்கமும், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆதரவாளர்கள் ஒரு பக்கமும் என பிரிந்து தங்களுக்குள்ளாகவே அடித்து கொள்ளும் நிலமையும் ஏற்பட்டுள்ளது.

இது ஒருபக்கம் இருக்க சேலம், தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரியில் அதிமுக, பாமக பலமாக இருப்பதால் கட்சி நிர்வாகிகளை கட்டுக்குள் கொண்டு வருவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இப்படியே விட்டால் கொங்குமண்டலம் பறிபோய்விடும் என சுதாரித்துக் கொண்ட முதலமைச்சர் ஸ்டாலின், சென்னையில் இருந்தபடி கொங்குமண்டலத்தை தனது நேரடி கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளார். சேலத்தை கவனிக்கும் நேரு, தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரியை சேர்த்து ஒருங்கிணைத்து தேர்தல் பணிகளை செய்ய வேண்டும் என ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.

அதேநேரம், திருப்பூர், நீலகிரி, நாமக்கல் மற்றும் ஈரோடு பகுதிகளில் திமுக தோல்வியடைந்தால் அந்த பகுதிகளை சேர்ந்த அமைச்சர்களின் பதவி பறிபோகும் என்றும் எச்சரித்துள்ளார். இப்படி கோஷ்டிமோதலில் இருந்த திமுக உறுப்பினர்கள் முதல்வரின் எச்சரிக்கையால் பதவி பறிபோகுமா என்ற அச்சத்தில் உள்ளனர்.

Tags

Next Story