பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு: வாழ்த்துக்கள்

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு: வாழ்த்துக்கள்

ஜவாஹிருல்லா

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை எதிர்கொள்ளும் மாணவர்களுக்கு வாழ்த்துக்கள் என மனிதநேய மக்கள் கட்சியின் மாநில தலைவர் பேராசிரியர் எம் எச் ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை எதிர்கொள்ளும் மாணவர்களுக்கு வாழ்த்துக்கள் மனிதநேய மக்கள் கட்சியின் மாநில தலைவர் பேராசிரியர் எம் எச் ஜவாஹிருல்லா எம் எல் ஏ வெளியிடும் வாழ்த்துச் செய்தி.

நாளை (26.03.24) பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு தொடங்க உள்ளது.தமிழ்நாடு, புதுச்சேரி முழுவதும் 9.38 லட்சம் மாணவ மாணவிகள் தேர்வு எழுத உள்ளனர். அனைவரும் இத்தேர்வில் வெற்றி பெறவும், சாதனை படைக்கவும் எனது உளமார்ந்தநல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். உங்கள் பயங்கள் அனைத்தையும் நீக்கி,

தன்னம்பிக்கையோடு தேர்வைஎதிர்கொள்ளுங்கள்.கடின உழைப்பும் நேர்மையும் எப்போதும் பலன் தரும். தேர்வில் நன்கு தெரிந்த விடைகளை முதலில் தெளிவாக எழுத முற்படுங்கள். எந்தவித கவனச் சிதறல்களுக்கும் ஆட்படாமல் உற்சாகத்தோடும் புத்துணர்வோடும்ஓர்மை சிந்தனையோடும் தேர்வுகளை எழுதுங்கள்.

உங்களின் எதிர்காலம் வளமாகவும் நலமாகவும் அமைய எனது வாழ்த்துக்களும்பிரார்த்தனைகளும். இப்படிக்கு. எம் எச் ஜவாஹிருல்லா தலைவர் மனிதநேய மக்கள் கட்சி

Tags

Next Story