ஃபெஞ்சல் புயல் பாதிப்பு; ஒரு மாத ஊதியத்தை வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!!

ஃபெஞ்சல் புயல் பாதிப்பு; ஒரு மாத ஊதியத்தை வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!!

CM Stalin

தமிழக அரசின் வெள்ள சீரமைப்பு பணிகளுக்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது ஒரு மாத ஊதியத்தை வழங்கி உள்ளார்.

ஃபெஞ்சல் புயல் காரணமாக பெய்த கனமழைக்கு விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தருமபுரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகின. குடியிருப்புகளில் சூழ்ந்த வெள்ளம் தற்போது தான் வடியத் தொடங்கி உள்ளது. இதனிடையே மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், தமிழக அரசின் வெள்ள சீரமைப்பு பணிகளுக்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது ஒரு மாத ஊதியத்தை வழங்கி உள்ளார். ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்டோருக்கு நிவாரண உதவி வழங்க தனது ஒரு மாத ஊதியத்துக்கான காசோலையை தலைமைச் செயலாளர் முருகானந்தத்திடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

Tags

Next Story