தமிழ்நாட்டிற்கு அதிகபட்ச நிதியைப் பெற்றுக் கொடுங்கள்: மத்திய குழுவிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்!!

தமிழ்நாட்டிற்கு அதிகபட்ச நிதியைப் பெற்றுக் கொடுங்கள்: மத்திய குழுவிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்!!
X

CM Stalin

தமிழ்நாட்டிற்கு அதிகபட்ச நிதியைப் பெற்றுக் கொடுங்கள் என மத்திய குழுவிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

ஃபெஞ்சல் புயலால் தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை பார்வையிட மத்தியக் குழு சென்னை வந்துள்ளனர். புயல் பாதிப்பு நிவாரணமாக ரூ.2000 கோடி கேட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்த நிலையில், மத்திய குழு வருகை தந்துள்ளனர். குழுவில் மத்திய உள்துறை இணைச்செயலாளர் ராஜேஷ் குப்தா தலைமையிலான குழுவில், பொன்னுசாமி, சோனமணி ஹேபம், சரவணன், தனபாலன் குமரன், ராகுல் பச்கேட்டி, பாலாஜி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். தொடர்ந்து, மத்திய குழு இன்று மாலை 7 மணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியானது. அதன்படி, ஃபெஞ்சல் புயலால் தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை பார்வையிட சென்னை வந்துள்ள மத்தியக் குழு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடன் ஆலோசனை நடத்தி வருகின்றனர். தொடர்ந்து, நாளை காலை முதல் விழுப்புரம், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் ஆய்வுப் பணிகளை மேற்கொள்கின்றனர். இந்நிலையில், ஃபெஞ்சல் புயலால் தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை பார்வையிட சென்னை வந்த மத்தியக் குழு அதிகாரிகளிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர், "ஃபெஞ்சல் புயல் மழை சேத பாதிப்புகளைக் கண்டறிந்து அறிக்கையை விரைவாக மத்திய அரசிடம் வழங்கி, தமிழ்நாட்டுக்கு அதிகபட்ச நிதியைப் பெற்றுத் தர நடவடிக்கை எடுங்கள்" என்றார்.

Tags

Next Story