திமுக இருக்கும் வரை தமிழ்நாட்டில் பாஜக நுழைய முடியாது - முதல்வர்
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே பெத்தநாயக்கன்பாளையத்தில் நடைபெற்ற பரப்புரையின் போது முதலமைச்சர் ஸ்டாலின் பேசியதாவது, நமது வீரபாண்டியார் மாவட்டத்திற்கு வந்திருப்பது பெருமையாக உள்ளது. இளைஞரணி மாநாடு நினைவுக்கு வருகிறது. வரலாற்று சிறப்புமிக்க வெற்றி தரவேண்டும் கள்ளக்குறிச்சி தொகுதியில் இந்த கூட்டம் நடைபெறுகிறது. சேலம் வேட்பாளர் செல்வகணபதிக்கு அறிமுகம் தேவையில்லை. கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற வெற்றி வேட்பாளர் மலையரசனுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என்று கேட்கிறேன்.
மூன்று ஆண்டு காலம் நம்முடைய ஆட்சி நாட்டுக்கே முன்னோடியாக செயல்பட்டு வருகிறது ஒரு மாநில அரசு எப்படி இருக்க வேண்டும் என்று நம் ஆட்சிதான் எடுத்துக்காட்டு. கடந்த சில தினங்களுக்கு முன்பு மோடி சேலத்துக்கு வந்தார். பத்தாண்டு கால ஆட்சியில் பெட்ரோல் விலை சிலிண்டர் விலை ஏற்றியதால் தூக்கத்த தொலைத்து விட்டார்கள் தொழிலாளர், பாட்டாளி மக்கள். எப்படி நல்லா இருக்க முடியும்,தேர்தல் பத்திரம் எதிர்கட்சி எதிர்த்து பேசினால் ரைடு விட்டாங்க. ஈடி சிபிஐ ரைடு விடுவதால் தோல்வி பயத்தில் உள்ளார் என்று அர்த்தம்.
இதனால் பாஜக மேல் கடும் கோபத்தில் இருக்காங்க பாஜக ஆட்சியில் பெண்கள் பாதுகாப்புக்கான திட்டத்தை செயல்படுத்வில்லை. பெண்ணை நீதிமன்றத்திற்குள் போகும்போது கொலை செய்தது பாஜக ஆட்சியில் தான். பெண்களை பத்தி பேச அவர்களுக்கு என்ன தகுதி இருக்கிறது.
இந்த தேர்தல் மட்டுமல்ல எப்போதுமே மாறாது புண்ணிய பூமிதான் தமிழ்நாடு. இங்கு திமுக இருக்கும் வரை பாஜக நுழைய முடியாது ,அண்ணா பெரியார் பிறந்த. மண்.
போதைப்பொருள் பற்றி பேசுகிறார்கள், தமிழ்நாட்டில் போதைப்பொருள் அதிகளவில் இருப்பதாக சொல்வது எப்படி?, குஜராத்தில் தான் போதைப்பொருள்கள் அதிகம், போதைப்பொருட்கள் அதிகம் உள்ள ஏழு மாநிலத்திலும் பாஜக ஆட்சி. இப்படி இருக்கும் போது நீங்கள் தமிழ் நாட்டை குறை சொல்கிறீர்கள். போதைப்பொருள் கடத்தல் வழக்கில் பாஜகவினர் அதிகம் உள்ளனர். மோடி நாட்டின் பிரதமர் என்ற பொறுப்பில்லாமல் பேசுகிறார் தமிழ்நாட்டில் பல்வேறு நாடுகளில் இருந்து முதலீடுகளை கொண்டு வந்து தொழில் தொடங்கி 7,77,89 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கபட்டுள்ளது என்றார்.