உபி ,யில் காங்கிரஸ் கூண்டோடு கலைப்பு.. இந்தியாவையே அதிரவைத்த செய்தி

X
ராகுல் காந்தி
உத்தரபிரதேச மாநில காங்கிரஸ் கமிட்டியை கூண்டோடு நீக்கி, கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். மக்களவை தேர்தலில் உத்தரபிரதேச மாநிலத்தில் சமாஜ்வாதி கட்சியுடன் கூட்டணி அமைத்து 17 இடங்களில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி, 6 இடங்களில் மட்டுமே வென்றது. அண்மையில் நடந்து முடிந்த 9 இடங்களுக்கான சட்டப்பேரவை இடைத்தேர்தலில் வேட்பாளர்களை களமிறக்காமல், சமாஜ்வாதி கட்சிக்கு ஆதரவு தெரிவித்தது. இந்த சூழலில், உத்தரபிரதேச காங்கிரஸ் கட்சியை வலுபடுத்தும் நோக்கில் மாநிலம், நகரம், மாவட்டம், வட்டம் உள்ளிட்ட அனைத்து கமிட்டியையும் கூண்டோடு நீக்கி கட்சியின் தேசிய தலைவர் கார்கே உத்தரவிட்டுள்ளார். இந்த அறிவிப்பு தேசிய அளவில் பேசுபொருளாகியுள்ளது.
Next Story