பாபநாசத்தில் கிராம நிர்வாக அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்

பாபநாசத்தில் கிராம நிர்வாக அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள்

பாபநாசத்தில் கிராம நிர்வாக அலுவலகம் முன்பு கட்டிட தொழிலாளர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பாபநாசம் கிராம நிர்வாக அலுவலகம் முன்பு தஞ்சை மாவட்ட கட்டிட தொழிலாளர் சங்கம் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட துணை செயலாளர் சீனி சுகுமாரன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது .ஏ .ஐ .டி .யு. சி மாநில செயலாளர் தில்லைவனம் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்.

நல வரி வசூல் சட்டங்களை முறையாக செயல்படுத்த வேண்டும் கட்டுமான தொழிலாளரின் சமூக பாதுகாப்புக்கு தேவையான வரியை குறைந்தபட்ச 2% சதவீதம் முதல் 5% உயர்த்தி வசூல் செய்ய வேண்டும் கட்டுமான தொழிலாளர்களுக்கு சட்ட பாதுகாப்பு வழங்க வேண்டும் நலவாரிய மூலமாக மருத்துவ இ.எஸ்.ஐ வசதி காப்பீடு பி.எப் பலன்களை வழங்க வேண்டும் ,தீபாவளி அல்லது பொங்கல் பண்டிகை பரிசாக குறைந்தபட்ச ரூ.5 ஆயிரம் வழங்கவும் ஓய்வூதியம் ரூ. 6000 வழங்க வேண்டும் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் கிளை பொறுப்பாளர்கள் பாலசுப்ரமணியன், கலியபெருமாள் மற்றும் கட்டுமான தொழிலாளர்கள் திரளாக கலந்து கொண்டனர் . பட விளக்கம் பாபநாசம் கிராம நிர்வாக அலுவலகம் முன்பு கட்டுமான தொழிலாளர்கள் கோரிக்கை வலியுருத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட போது எடுத்த படம்.

Tags

Next Story