கிள்ளியூர் தொகுதியில் வளர்ச்சி திட்ட பணிகள்: அமைச்சர் துவக்கி வைப்பு

கிள்ளியூர் தொகுதியில் வளர்ச்சி  திட்ட பணிகள்: அமைச்சர் துவக்கி வைப்பு

பூமி பூஜையில் கலந்து கொண்டவர்கள் 

கிள்ளியூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் ரூபாய் 1.28 கோடி ரூபாய் மதிப்பில் வளர்ச்சி திட்ட பணிகளை அமைச்சர் முதல் தங்கராஜ் துவக்கி வைத்தார்.

கன்னியாகுமரி மாவட்டம் கிள்ளியர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட அரசு ஆராம்ப சுகாதார மைய வளாகத்தில் ரூ.50 இலட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்படவுள்ள வட்டார பொது சுகாதார ஆய்வக அலகு அலமப்பதற்கான பணிகள் துவக்கி வைக்கப்பட்டுள்ளது.

மேலும் கிள்ளியூர் பேரூராட்சிக்குட்பட்ட அரிசி விளை, குழிஞன்விளை, துத்திவிளை, கம்பிளார். சரல்விளை, சானல் சாலை, கம்பிளார் தரைமட்ட தொட்டி சானல் கரை சாலை வரை நபார்டு திட்டத்தின்கீழ் ரூ.77.50 இலட்சம் மதிப்பில் தார் தளம் அமைக்கும் பணி துவக்கி வைக்கப்பட்டுள்ளது.

இப்பணிகளை விரைந்து முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என அமைச்சர்மனோ தங்கராஜ் அவர்கள் தெரிவித்தார்கள். இந்நிகழ்ச்சிகளில் வட்டார மருத்துவ அலுவலர் மரு.ரமா மாலினி, மேற்பார்வையாளர் திரு.ஐயப்பன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், கிள்ளியர் பேரூராட்சி தலைவர், உள்ளாட்சி பிரதிநிதிகள் உட்பட துறை அலுவலர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டார்கள்.

Tags

Next Story