தேமுதிகவை தட்டி தூக்கிய திராவிட கட்சி.. கிரீன் சிக்னல் காட்டிய பிரேமலதா.. அரசியலில் அடுத்த திருப்பம்.

.
ADMK DMDK: அடுத்த மாதம் தமிழகத்தில் நடைபெற போகும் சட்டமன்ற தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்படும் என்று கூறிய நிலையில் அதற்கான பணிகளில் தேர்தல் ஆணையமும், மாநில கட்சிகளும் ஈடுபட தொடங்கி விட்டன. கூட்டணி கணக்குகள், தொகுதி பங்கீடு, வேட்பாளர்கள் தேர்வு போன்ற பணிகள் முழு வீச்சில் நடைபெற்று கொண்டிருக்கிறது. இந்த காலகட்டத்தில் கூட்டணி இல்லாமல் யாரும் ஆட்சிக்கு வர முடியாத நிலை உள்ளதால் ஆளுங்கட்சியான திமுகவும், ஆண்ட கட்சியான அதிமுகவும், புதிய கட்சியான தவெகவும் மூன்றாம் நிலை கட்சிகளான பாமக, தேமுதிக உடன் கூட்டணி அமைக்க பேச்சுவார்த்தைகள் நடத்தி வருகின்றன. பாமகவில் அன்புமணி தரப்பு அதிமுக உடன் கூட்டணியை உறுதி செய்து விட்டது.
மீதமிருப்பது தேமுதிக மட்டும் தான். தேமுதிக பொதுசெயலாளர் பிரேமலதா திமுக, அதிமுக, தவெக என மூன்று பக்கமும் கதவை திறந்து வைத்துள்ள நிலையில் யாருடன் கூட்டணி என்பதை சஸ்பென்சாகவே வைத்துள்ளார். இவ்வாறான நிலையில் நாளை நடைபெற இருக்கும் தேமுதிக மாநாட்டில் கூட்டணியை அறிவிப்பதாக இவர் கூறியுள்ளார். இந்த சமயத்தில் அதிமுக-தேமுதிக கூட்டணி உறுதியாகிவிட்டது என்பதை அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறி பரபரப்பை கிளப்பியுள்ளார். தேமுதிக கூட்டணி குறித்து பேசிய அவர், மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த தன்னுடைய அரசியல் வாழ்க்கை முழுவதும் திமுகவை கடுமையாக எதிர்த்து வந்தார்.
அவரின் கொள்கைக்கு மாறாக பிரேமலதா நடந்து கொள்ள மாட்டார் என்று நம்பிக்கை தெரிவித்த அவர், எதிர்வரும் தேர்தலில் தேமுதிக கட்சி அதிமுக உடனே கூட்டணி அமைக்கும் என்று உறுதி கூறியுள்ளார். தற்போது தேமுதிக கூட்டணி மட்டுமே பேசு பொருளாக இருந்த நிலையில், ராஜேந்திர பாலாஜியின் கருத்து அதற்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது. இதனால் நாளை நடைபெற இருக்கும் தேமுதிக மாநாட்டில் அதிமுக உடன் தான் கூட்டணி என்பதை பிரேமலதா அதிகாரபூர்வமாக அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
