திமுக வேட்பாளர் தங்கதமிழ்செல்வன் வெற்றி: பதவியை ராஜினாமா செய்கிறேன்

திமுக வேட்பாளர் தங்கதமிழ்செல்வன் வெற்றி:  பதவியை ராஜினாமா செய்கிறேன்

அமைச்சர் மூர்த்தி

மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அமைச்சர் பி.மூர்த்தி உறுதி அளித்துள்ளார்.

மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தேனி நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் தங்கதமிழ்செல்வன் அறிமுக கூட்டம் பத்திரபதிவுத் துறை அமைச்சர் பி.மூர்த்தி தலைமையில் நடைபெற்றது. சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில் கலந்து கொண்ட வணிக வரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.முர்த்தி பேசியதாவது, தேனி நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் தங்க தமிழ்செல்வனை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும். இதற்காக கழக தொண்டர்கள் அயராது பாடுபட்டு வெற்றிவாகை சூட வேண்டும்.

40 தொகுதிகளையும் திமுக கூட்டணி தான் வெற்றி பெறும். தேனி நாடாளுமன்ற தொகுதியில் வெற்றி பெற முடியாவிட்டால் மறுநாளே நான் எனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வேன் என ஆவேசமாக பேசினார்.

மேலும் அவர் பேசியதாவது, உண்மையாக வெற்றிக்கு உழைக்க வேண்டும், கட்சிக்கு சிலர் துரோகம் செய்து வருகின்றனர். சோழவந்தான் தொகுதியில் நான் கடுமையாக உழைத்ததால் தான் தற்போது அமைச்சராக பதவி உயர்ந்துள்ளேன். எனவே கட்சியினர் துரோகம் செய்யாமல் உண்மையாக வேட்பாளர்களுக்கு உழைத்து வெற்றிக்கு பாடுபட வேண்டும் என வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் அமைச்சர் பி.மூர்த்தி பேசினார். இந்த கூட்டத்தில் காங்கிரஸ், விசிக, மதிமுக உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

முன்னதாக பாலமேடு அருகே உள்ள பிரசித்தி பெற்ற வலையபட்டி மஞ்சமலை சுவாமி கோவிலில் அமைச்சர் பி.மூர்த்தி தலைமையில் தேனி நாடாளுமன்ற வேட்பாளர் தங்கதமிழ்ச்செல்வன், எம்எல்ஏ வெங்கடேசன், மற்றும் கட்சி நிர்வாகிகள் கூட்டணி கட்சியினர் தொண்டர்கள் பலர் திரளாக கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்

Tags

Next Story