திமுக வேட்பாளர் பட்டியல் தயார் - யார், யாருக்கு எந்தெந்த தொகுதி..?

திமுக வேட்பாளர் பட்டியல் தயார் - யார், யாருக்கு எந்தெந்த தொகுதி..?
திமுக வேட்பாளர்கள் பட்டியல்
நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியிடப்பட உள்ளது.

நாடாளுமன்ற தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலைநாளை முதலமைச்சரும், திமுக தலைவருமான ஸ்டாலின் வெளியிடுகிறார். அதேநேரம், திமுக மாவட்ட செயலாளர்களின் கூட்டம் முதலமைச்சர் தலைமையில் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

முதல்கட்டமாக தமிழகத்தில் ஏபரம் 19ம் தேதி தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதனால் வாக்காளர்களை தேர்வு செய்வதும், அவர்கள் எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடுவார்கள் என்ற பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. அந்த வகையில் திமுக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் போட்டியிடுகிறது. அதில் 21 தொகுதிகளில் தனித்து போட்டியிடும் திமுக, 19தொகுதிகளை கூட்டணி கட்சிகளுக்கு வழங்கியுள்ளது.

திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகளும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் கட்சிகளுக்கு தலா 2 தொகுதிகளும், மதிமுக, இந்திய யூனியன் முஸ்லீம் லீக், கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி ஆகியவற்றுக்கு தலா ஒரு தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளன.

திமுக நேரடியாக வட சென்னை, தென் சென்னை, மத்திய சென்னை, ஸ்ரீபெரும்புதூர், நீலகிரி, தூத்துக்குடி, தருமபுரி, சேலம், கோயம்புத்தூர், தென்காசி, தேனி, ஆரணி, அரக்கோணம், ஈரோடு, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், காஞ்சிபுரம், பொள்ளாச்சி, தஞ்சாவூர், திருவண்ணாமலை, வேலூர் உள்ளிட்ட தொகுதிகளில் போட்டியிடுகிறது. இதற்கான விருப்ப மனு தாக்கல் கடந்த வாரம் நடந்த நிலையில் வேட்பாளர்களின் நேர்க்காணலும் நடந்துமுடிந்துள்ளது.

இந்த நிலையில் நாளை திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளார்களின் பட்டியலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிடுகிறார். அதில், வட சென்னையில் கலாநிதி வீராசாமியும், மத்திய சென்னையில் தயாநிதி மாறனும் தென் தென்னையில் தமிழச்சி தங்கப்பாண்டியனும், மீண்டும் போட்டியிட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஸ்ரீபெரும்புத்தூரில் டி.ஆர்பாலுவுக்கும் நீலகிரியில் ஆ.ராசாவுக்கும் தூத்துக்குடியில் கனிமொழிக்கும் மீண்டும் வாய்ப்பு தரப்படலாம் என்றும், அரக்கோணத்தில் ஜெகத்ரட்சகனும், வேலூரில் கதிர் ஆனந்தும் காஞ்சியில் செல்வமும் களம் காண உள்ளதாக கூறப்படுகிறது. இதேபோல், தருமபுரியில் செந்தில்குமார், ஆ.மணி, பழனியப்பன் ஆகிய 3 பேரில் ஒருவருக்கு வாய்ப்பு வழங்கப்பட உள்ளது.

நாளை வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும் அதேநேரம் திமுக மாவட்ட செயலாளார்கள் கூட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் என்றும் கூறப்பட்டுள்ளது.

Tags

Next Story