ஸ்டாலின் ஆட்சியில் விமான நிலையத்துக்கு நிகர் பேருந்து நிலையம்! பாஜகவுக்கு வைத்தெரிச்சல் - அமைச்சர் சேகர் பாபு

தமிழ்நாடு திருக்கோயில்கள் மற்றும் பக்தர்கள் சார்பில் சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்களுக்காக 10 லட்சம் பிஸ்கட் பாக்கெட்டுகள் அனுப்பும் பணியை வானகரம் அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயிலில் இருந்து இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கொடி அசைத்து துவக்கி வைத்தார்.

தமிழ்நாடு மற்றும் பிற மாநிலங்களில் இருந்து சபரிமலைக்கு ஆண்டுதோறும் கார்த்திகை மாதத்தில் மாலை அணிந்து விரதம் இருந்து இருமுடி கட்டி ஏராளமான ஐயப்ப பக்தர்கள் புனித யாத்திரை சென்று வருகின்றனர். அவ்வாறு சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு உதவிடும் வகையில் தமிழக அரசு சார்பில் தகவல் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இந்து சமய அறநிலையத்துறை தமிழ்நாடு திருக்கோயில்கள் மற்றும் பக்தர்கள் இணைந்து 10 லட்சம் பிஸ்கட் பாக்கெட்டுகள் 6 கண்டெய்னர் லாரிகள் மூலம் சபரிமலை ஐயப்ப பக்தர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இந்த வாகனங்களை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு சென்னை வானகரம் அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில் இருந்து கொடி அசைத்து தொடங்கி வைத்தார். இந்த 10 லட்சம் பிஸ்கட் பாக்கெட்டுகளும் சபரிமலை தேவஸ்தான அலுவலர்களிடம் வரும் ஞாயிற்றுக்கிழமை ஒப்படைக்கப்படும்.

இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர்பாபு..

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் கிடைத்த அனுபவத்தை வைத்து குத்தம்பாக்கம் பேருந்து நிலையத்தை இந்த ஆண்டு இறுதிக்குள் திறக்க பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது

தமிழகத்தில் உள்ள திருக்கோயிலின் சார்பில் நான்கு கண்டெய்னர் வாகனங்களில் 10 லட்சம் அளவிற்கு பிஸ்கட் பாக்கெட்டுகள் ரூ.40 லட்சம் மதிப்பீட்டில் அனுப்பப்பட்டுள்ளது

சபரிமலையை பொறுத்தவரை ஒரு மணி நேரத்திற்கு 3500 பக்தர்கள் தான் தரிசனம் செய்யக்கூடிய சூழ்நிலை உள்ளது ஒரு நாளைக்கு 18 மணி நேரம் சாமி தரிசனம் செய்ய ஏற்பாடு செய்துள்ளனர்

நாள் ஒன்றுக்கு பக்தர்கள் வருகை 70 ஆயிரம் வரை உள்ள நிலையில் போலீஸ் மற்றும் தேவஸ்தானம் போர்டு சார்பில் பக்தர்கள் தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஒரு லட்சம் பக்தர்கள் வரும்போது சாமி தரிசனம் செய்ய சிரமம் ஏற்பட்டுள்ளது மாலையில் செல்லக்கூடிய நபர்கள் நிறைய அபிஷேகத்திற்காக இரவு தங்கி விடுகின்றனர் இரண்டு பக்தர்களின் கணக்கிடும் போது ஒரு லட்சத்தை தாண்டுகிறது ஏற்பாடு செய்ததில் சிரமம் ஏற்படுகிறது

இருப்பினும் கேரளா அரசு முடிந்த அளவிற்கு பல்வேறு வசதிகளை பக்தர்கள் விரைவாக சாமி தரிசனம் செய்வதற்கும் சிரமப்பட்டு ஏற்பாடு செய்து கொண்டிருக்கிறார்கள்

குத்தம்பாக்கம் பேருந்து நிலையம் பணிகள் நடந்து வருகிறது எவ்வளவு விரைவாக மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர முடியுமோ விரைவாக கொண்டு வரப்படும் குத்தம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இந்த ஆண்டு இறுதிக்குள் திறக்க வேண்டும் என திட்டமிட்டுள்ளோம்

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் கிடைத்த அனுபவத்தை வைத்து கூடுதல் சிறப்பு வசதிகளை செய்து முடித்து இந்த ஆண்டு இறுதிக்குள் அதற்கான பணிகளை மேற்கொள்வோம். எனத் தெரிவித்துள்ளார்.https://www.youtube.com/watch?v=QZgy-9R_XJ8

Tags

Next Story