விசிகவிற்கு தேர்தல் ஆணையம் அங்கீகாரம்: கும்பகோணத்தில் கொண்டாட்டம்

விசிகவிற்கு தேர்தல் ஆணையம் அங்கீகாரம்: கும்பகோணத்தில் கொண்டாட்டம்

விசிகவினர் கொண்டாட்டம்

விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு தேர்தல் ஆணையம் அங்கீகாரம் வழங்கியதை தொடர்ந்து கும்பகோணத்தில் விசிகவினர் வெடி வெடித்துக் கொண்டாடத்தில் ஈடுபட்டனர்.

தஞ்சாவூர் வடக்கு மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் அரசு போக்குவரத்து கழக அம்பேத்கர் தொழிலாளர் விடுதலை முன்னணி சார்பில் விசிக தலைவர் திருமாவளவன், பொதுச்செயலாளர் ரவிக்குமார் ஆகியோர் தனி சின்னத்தில் மாபெரும் வெற்றி பெற்றதை கொண்டாடும் வகையிலும்,

விடுதலை சிறுத்தைகள் கட்சி தேர்தல் ஆணையத்தில் அங்கீகாரம் பெற்றதை கொண்டாடும் வகையிலும் தஞ்சை வடக்கு மாவட்ட செயலாளர் முல்லைவளவன் தலைமையில், கும்பகோணத்தில் அம்பேத்கர் சிலை, தந்தை பெரியார் சிலைகளுக்கு மாலை அணிவித்து, வெடி வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் பேரவை பொதுச் செயலாளர் அண்ணாதுரை, மண்டல பொதுச்செயலாளர் ரமேஷ்குமார், பேரவை துணைச் செயலாளர் காளிமுத்து, மண்டல தலைவர் வீரமணி கௌதமன், கும்பகோணம் தொகுதி பொறுப்பாளர் அரசமுதல்வன், மாவட்ட அமைப்பாளர் புரட்சியாளன் உள்பட ஏராளமான விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story