25-ந்தேதி அ.தி.மு.க. சார்பில் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம்: எடப்பாடி பழனிசாமி

Edapadi palanisamy
அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தி மொழித் திணிப்பை எதிர்த்து மொழிப் போராட்டத்தில் உயிர் நீத்த மொழிப் போர்த்தியாகிகளை நினைவு கூர்ந்து, அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் அ.தி.மு.க. மாணவர் அணியின் சார்பில் வருகிற 25-ந்தேதி (சனிக்கிழமை) அனைத்து மாவட்டங்களிலும் 'வீர வணக்க நாள் பொதுக்கூட்டங்கள்' நடைபெற உள்ளன. மாவட்ட மாணவர் அணிச் செயலாளர்கள், சம்பந்தப்பட்ட மாவட்டக் கழகச் செயலாளர்களுடனும், மாணவர் அணி நிர்வாகிகளுடனும், கழகம், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மன்றம், புரட்சித்தலைவி அம்மா பேரவை, எம்.ஜி.ஆர். இளைஞர் அணி, மகளிர் அணி, அண்ணா தொழிற்சங்கம், வழக்கறிஞர் பிரிவு, சிறுபான்மையினர் நலப் பிரிவு, விவசாயப் பிரிவு, மீனவர் பிரிவு, மருத்துவ அணி, இலக்கிய அணி, அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணி, இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை, தகவல் தொழில்நுட்பப் பிரிவு, வர்த்தக அணி மற்றும் கலைப் பிரிவு உட்பட கழகத்தின் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகளுடனும். உள்ளாட்சி அமைப்புகளின் இந்நாள், முன்னாள் பிரதிநிதிகளுடனும்; கூட்டுறவு சங்கங்களின் முன்னாள் பிரதிநிதிகளுட னும் இணைந்து சிறப்புப் பேச்சாளர்களுடன் தொடர்பு கொண்டு, வீர வணக்க நாள் பொதுக் கூட்டங்களை ஏற்பாடு செய்து சிறப்பாக நடத்தி, அதன் விபரங்களை தலைமைக் கழகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும். அனைத்து மாவட்டங்களிலும் 25-ந்தேதி அன்று அ.தி.மு.க. மாணவர் அணி சார்பில் ஊர்வலமாக சென்று மொழிப்போர் தியாகிகளின் திரு உருவப்படங்களுக்கு வீரவணக்கம் செலுத்த வேண்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.