அரசு போர்க்கால அடிப்படையில் பணிகளை மேற்கொள்ள வேண்டும்: எடப்பாடி பழனிசாமி

அரசு போர்க்கால அடிப்படையில் பணிகளை மேற்கொள்ள வேண்டும்: எடப்பாடி பழனிசாமி

எடப்பாடி பழனிசாமி 

அரசு போர்க்கால அடிப்படையில் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சேலம் மாவட்டத்தில் புயல் காரணமாக கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. அதே போல் நேற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை கொட்டியது. இதனால் பல பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்து காணப்படுகிறது. இந்த நிலையில், வெள்ள நீர் வடியத்தொடங்கிய உள்ளதாக சேலம் கந்தப்பட்டியில் ஆய்வு மேற்கொண்ட அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். மேலும், ஏற்காட்டில் 20 இடங்களில் மண் சரிவு, 22 கிராமங்களுக்கு செல்லும் தரைப்பாலம் சேதம் ஆகி உள்ளது. திருமணி முத்தாறு முழுமையாக தூர்வாரப்படாததால் குடியிருப்பு பகுதிகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. முறையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காததால் சேலம் மாநகரத்தில் குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. சாத்தூர் அணையில் இருந்து எவ்வித அறிவிப்பும் இன்றி தென்பெண்ணை ஆற்றுக்கு நீர் திறக்கப்பட்டதால் கரையோர கிராமங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. தென்பெண்ணை ஆற்றுக்கரையோரம் இருக்கக்கூடிய நூற்றுக்கணக்கான கிராம மக்கள் கடுமையான பாதிப்பு. தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

Tags

Next Story