தமிழ்மொழியின் மாண்பை அதிகரிக்க முயற்சி:ஜவாஹிருல்லா எம்எல்ஏ
ஜவாஹிருல்லா
தமிழ் மொழியின் மாண்பை அதிகரிக்க அனைத்து முயற்சிகளும் எடுக்கும் என பாஜக தேர்தல் அறிக்கையில் அறிவித்துள்ளது வெறும் வார்த்தை ஜாலம்! மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ-. வெளியிடும் பத்திரிக்கை அறிக்கை:,ஜ
பாஜக வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில் தமிழ் மொழியின் மாண்பை அதிகரிக்க அனைத்து முயற்சிகளும் எடுக்கும் என அறிவித்துள்ளது வெறும் வார்த்தை ஜாலமே தவிர வேறில்லை என மனிதநேய மக்கள் கட்சி கருதுகிறது. ஒவ்வொரு முறையும்,
மோடி தமிழ்நாட்டிற்கு வரும் போது தமிழ் மக்கள் மீதும், தமிழ் மொழிகள் மீதும் மிகவும் அக்கறை உள்ளது போன்று மேடையில் பேசிவிட்டு டெல்லிக்குச் சென்றவுடன், ஒரே நாடு, ஒரே கலாச்சாரம் என பேசிவருவதைத் தமிழ்நாட்டு மக்கள் அறியாமல் இல்லை. சர்வ பள்ளி ராதாகிருஷ்ணன் அவர்களின் யோசனையின் அடிப்படையில் நாட்டின் முக்கியப் பல்கலைக்கழகங்களில் தமிழ் மொழிக்கானத் துறை துவக்கப்பட்டிருந்தது. குறிப்பாக உ.பி. மாநிலம் ஆக்ரா, கான்பூர், மீரட், பஞ்சாபொன் ஜலந்தரிலும் இருந்தன. பிறகு மூடப்பட்ட இந்த தமிழ்த் துறைகளை இந்த பாஜக அரசிற்குத் திறக்க மனம் வரவில்லை.
வெளிநாடுகளில் உள்ள தமிழுக்கானத் துறைகளில் ஜெமர்னியின் கொலோன் பல்கலைக்கழகத்தில் ஒரு தமிழ் துறை உள்ளது. இது மூடப்படும் நிலைக்குத் தள்ளப்பட்ட போது மனிதநேய மக்கள் கட்சி மற்றும் தமிழ் ஆர்வலர்களின் கோரிக்கையை ஏற்று அங்கு அந்த இருக்கை செயல்பட ரூபாய் ஒரு கோடி நிதி அளித்து தமிழ்நாட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள். தற்போது அந்த துறை மீண்டும் மூடப்படும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. இதனைக் காக்க பாஜக இதுவரை நிதி அளிக்கவில்லை. செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம் சார்பில் பல மொழிபெயர்ப்பு நூல்களை வெளியிட்டதாக மார்தட்டிக் கொள்ளும் பாஜக அரசு.
இதே நிறுவனம் சார்பில் திட்டமிடப்பட்ட ஆசிய நாடுகளின் பல்கலைக்கழகங்களுக்கான தமிழ் இருக்கைகள் துவக்க எந்த நடவடிக்கை எடுக்கவில்லை. தமிழ்மொழி மிகுந்த அக்கறை உள்ளதாகக் காட்டிக்கொள்ளும் பாஜவை இந்த நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டு மக்கள் நல்ல பாடத்தைப் புகட்டுவார்கள் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. இப்படிக்கு, எம்.எச்.ஜவாஹிருல்லா