தேர்தல் நடத்தை விதி: பாபநாசம் எம்எல்ஏ அலுவலகம் பூட்டி சீல் வைப்பு
எம்எல்ஏ அலுவலகம் பூட்டி சீல் வைப்பு
பாராளுமன்ற தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமுல்படித்தபட்டுள்ளதால் பாபநாசம் எம்எல்ஏ அலுவலகம் பூட்டி சீல் வைக்கப்பட்டது.
இந்தியாவில் பாராளுமன்ற தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெறும் எனவும் தமிழ்நாட்டிற்கு ஒரே கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதி தேர்தல் நடைபெறும் எனவும் தேர்தல் முடிவுகள் ஜூன் 4-ஆம் தேதி வெளியிடப்படும் என இந்திய தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட உடனே நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது. இதனிடையே தேர்தல் நடத்தை விதிமுறைகளின் படி பாபநாசம் சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகம் பூட்டி சீல் வைக்கப்பட்டது. பாபநாசம் வட்டாட்சியர் மணிகண்டன் முன்னிலையில் தேர்தல் துணை வட்டாட்சியர் விவேகானந்தன் வருவாய் ஆய்வாளர் சுந்தரேசன் ,
கிராம நிர்வாக அலுவலர் ஜோதிபாண்டியன், கிராம உதவியாளர்கள் உள்ளிட்டோர் சட்டப்பேரவை உறுப்பினர்கள் அலுவலகத்திற்க்கு வந்து கதவுகளை பூட்டி சீல் வைத்தனர் .
Next Story