வெள்ள நிவாரணத்தை உயர்த்தி வழங்க வேண்டும்: ஜி.கே.வாசன்

வெள்ள நிவாரணத்தை உயர்த்தி வழங்க வேண்டும்: ஜி.கே.வாசன்

ஜி கே வாசன்

வெள்ள நிவாரணத்தை உயர்த்தி வழங்க வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.

த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டு உள்ள அறிக்கையில், அதி கனமழையால் கடுமையாக பாதிக்கப்பட்ட மாவட்ட மக்களுக்கு ரூ. 2,000, உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.5,00,000, சேதம் அடைந்த மானாவாரி பயிர்களுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ.8,500, சேதம் அடைந்த குடிசைகளுக்கு ரூ. 10,000, 33 சதவீதம் அல்லது அதற்கு மேல் சேதமடைந்த நெற்பயிர் உள்ளிட்ட இறவை பாசனப் பயிர்களுக்கு ஹெக்டேருக்கு ரூ. 17,000, சேதம் அடைந்த குடிசைகளுக்கு ரூ. 10,000, எருது, பசு உள்ளிட்ட கால்நடைகளின் உயிரிழப்புக்கு ரூ. 37,500 என நிவாரணத் தொகையை அறிவித்திருப்பது போதுமானதல்ல. காரணம் கடன் வாங்கி விவசாயம் செய்த, கால்நடைகளை வளர்த்த விவசாயிகளுக்கு முதலீட்டை கணக்கிட்டால் தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ள நிவாரணம் சரியல்ல. எனவே தமிழக அரசு மழை வெள்ள புயல் பாதிப்பால் மிகவும் சிரமத்தில் இருக்கும் விவசாயிகள், கால்நடை வளர்ப்பவர்கள் என பாதிப்புக்குள்ளான அனைத்து தரப்பு மக்களின் வருங்கால விவசாயம், தொழில் ஆகியவற்றை கவனத்தில் கொண்டு நிவாரணத்தை உயர்த்தி முறையாக, முழுமையாக காலத்தே வழங்க வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் கேட்டுக்கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

Tags

Next Story