பொங்கலுக்கு 1.75 கோடி பேருக்கு இலவச வேட்டி -–சேலை! - அமைச்சர் ஆர்.காந்தி

பொங்கலுக்கு 1.75 கோடி பேருக்கு இலவச வேட்டி -–சேலை! - அமைச்சர் ஆர்.காந்தி

ஆர்.காந்தி

வேலூர் மாவட்­டம் காட்­பாடி தாலுகா திரு­வ­லம் அடுத்த அம்­முண்டி பகு­தி­யில் உள்ள வேலூர் கூட்­டு­றவு சர்க்­கரை ஆலை­யில் நடப்­பாண்­டிற்கான கரும்பு அரவை தொடக்க விழா மாவட்ட ஆட்­சி­யர் வே.இரா.சுப்புலட்­சுமி தலை­மை­யில் நடை­பெற்­றது. இந்­நி­கழ்ச்­சி­யில் ­கைத்­தறி மற்­றும் துணி நூல் துறை அமைச்­சர் இரா­ணிப்­பேட்டை ஆர்.காந்தி கலந்து கொண்டு கரும்பு அர­வையை தொடங்கி வைத்­தார். சர்க்­கரை ஆலை செய­லாட்­சி­யர் நர்­மதா அனை­வ­ரை­யும் வர­வேற்­றார். நிகழ்ச்­சி­யில் விவ­சா­யி­க­ளுக்கு தமி­ழக அர­சால் மானிய விலை­யில் வழங்­கப்­ப­டும் கரும்பு வெட்­டும் இயந்­தி­ரம் 2023 .24 ஆண்டு அரவை பரு­வத்­தில் அதிக அளவு கரும்பு சப்ளை செய்த 24 விவ­சா­யி­க­ளுக்கு பரி­சுத்­தொ­கையை அமைச்­சர் ஆர்.காந்தி முன்­னி­லை­ யில் வழங்­கப்­பட்­டது.

பிறகு அமைச்­சர் ஆர்.காந்தி பேசு­கை­யில் கடந்த மூன்று ஆண்­டு­க­ளில் சுமார் ஒரு லட்­சத்து 75 ஆயி­ரம் விவ­சா­யி­க­ளுக்கு இல­வச மின்­சா­ரம் வழங்­கப் பட்­டுள்­ளது.

தமி­ழக அரசு வேளாண்மை, கல்வி ,சுகா­தா­ரம் ஆகிய மூன்று துறை­க­ளுக்கு அதிக அள­வில் நிதி ஒதுக்­கீடு செய்து செயல்­ப­டுத்தி வரு­கி­றது. வேளாண்­மைக்கு தனி பட்­ஜெட் தாக்­கல் செய்­யப்­ப­டு­கி­றது.

ஏழை -எளிய மக்­க­ளுக்கு வழங்­கப்­ப­டும் இல­வச வேட்டி -– சேலை இந்த ஆண்டு இறு­திக்­குள் 90 சத­வீ­தம் பேருக்­கும், ஜன­வரி மாதம் 10ந்தேதிக்­குள் நூறு சத­வீ­தம் என ஒரு கோடியே 75 லட்­சம் பேருக்கு வழங்­கப்­ப­டும் .

15 வண்­ணங்­க­ளில் சேலை­க­ளும் ஐந்து வண்­ணங்­க­ளில் வேட்­டி­க­ளும் தர­மா­ன­வை­யா­க­வ­ழங்க நட­வ­டிக்கை எடுக்­கப் பட்­டுள்­ளது.

துணி ரகங்­கள் வெளி ­நா­டு­க­ளில் இருந்து கொள்­மு­தல் செய்­வ­தாக கூறப்­படு­வது தவறு. நூலுக்கு மட்­டும்தான் டெண்­டர் விடப்­ப­டு­கி­றது. ஆனால் அதை தயா­ரிப்­பது கூட்­டு­றவு சங்­கங்­கள் தான் கடந்த ஆண்டு துணி­ர­கங்­க­ளில் பாலிஸ்­டரை கலப்­ப­தாக தவ­றான தக­வல் தெரி­வித்து இருந்­த­னர் .

அதற்­காக மொத்­த­மும் பாலிஸ்­டர் கலந்­தி­ருக்­கி­றது என கூறு­வது தவ­றா­கும். இதனை தடுக்­கும் வித­மாக கண்­கா­ணிப்பு குழுக்­கள் அமைக்­கப்­பட்டு கண்­காணித்து வரு­கி­றோம் .

துணி நூல் துறையை பொறுத்­த­வரை யார் தவறு செய்­தா­லும் தக்க நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­டும் .

நூல் விலையை தீர்­மா­னிப்­பது தமி­ழக அரசு இல்லை .காட்­டன் கார்ப்­ப­ரே­ஷன் ஆப் இந்­தியா கட்­டுப்­பாட்­டில் தான் நூல் விலை உள்­ளது.

சைமா எனப்­ப­டும் சவுத் இந்­தியா மில் அசோ­சி­யே­சன் கோரிக்­கையை ஏற்று செஸ் வரியை நீக்­கி­னோம், மில்­க­ளுக்கு மானி­யம் அளித்­தோம், இத­னால் துணியை நூல் உரி­மை­யா­ளர்­கள் தமி­ழக முத­ல­மைச் ­சரை சந்­திக்க உள்­ள­னர் மில்­க­ளில் எந்­தி­ரங்­கள் புதுப் ­பிக்க எட்டு சத­வீ­தம் வட்டி வங்­கி­க­ளுக்கு கட்­டி­னால் ஆறு சத­வீ­தம்­அ­ரசு அளிக்­கி­றது. நிதி­நிலை எப்­படி இருந்­தா­லும் அதனை சரி­யாக கையாண்டு முத­ல­மைச்­சர் மு.க.ஸ்டாலின் அனைத்து துறை­க­ளுக்­கா­க­வும் சிந்­ தித்து செயல்­ப­டுத்­து­கி­றார்.

இவ்­வாறு அவர் பேசி­னார்.

நிகழ்ச்­சி­யில் வேலூர் மாந­கர செய­லா­ளர் ப. கார்த்­தி­கே­யன் எம்.எல்.ஏ., இரா­ணிப்­பேட்டை மாவட்ட இளை­ஞ­ரணி அமைப்­பா­ளர் ஜே.எல். ஈஸ்­வ­ரப்­பன் எம் .எல் .ஏ, ஒன்­றிய குழு தலை­வர் வேல்­மு­ரு­கன் , துணைத்­த­லை­வர் சர­வ­ணன், ஒன்­றிய கழக செய­லா­ளர் தணி­கா­ச­லம் மற்­றும் கழக நிர்­வா­கி­கள் கலந்து கொண்­ட­னர்.

கட­லூர் கிழக்கு மாவட்­டம், புவ­ன­கிரி ஒன்­றி­யம், சேத்­தி­யாத்­தோப்பு – புவ­ன­கிரி மெயின் ரோட்­டில் மிரா­ளூர் கிளைக் கழகச் செய­லா­ளர் ஜி .சேது­ரா­மன் பிள்ளை எம் .ஜி .எஸ். பெட்­ரோல் பங்க் நிலை­யத்தை அமைச்­சர் எம் .ஆர். கே. பன்­னீர்­செல்­வம் திறந்து வைத்து,வாக­னங்­க­ளுக்கு பெட்­ரோல் விநி­யோ­கித்து துவக்­கி­வைத்­தார். இந்த நிகழ்­வில் மாவட்டக் கழகப் பொரு­ளா­ளர் எம்.ஆர்.கே.பி.கதி­ர­வன், முன்­னாள் எம்.எல்.ஏ,துரை.கி.சர­வ­ணன், புவ­ன­கிரி மேற்கு ஒன்­றிய கழக செய­லா­ளர் ஏ.எஸ். மதி­ய­ழ­கன், கம்­மா­பு­ரம் தெற்கு ஒன்­றிய கழக செய­லா­ளர் கே.ஆர்.ராயர், சேத்­தி­யா­தோப்பு பேரூர் கழக செய­லா­ளர் வழக்­க­றி­ஞர் பழனி.மனோ­க­ரன் மாவட்ட இளை­ஞ­ரணி துணை அமைப்­பா­ளர் ஏ.எம். மதி­ய­ழ­கன் தமிழ்­நாடு வணி­கர் நல வாரிய உறுப்­பி­னர் எஸ் .கே. கரு­ணா­நிதி, மாவட்டக் கழக பிர­தி­நிதி துரை மணி­ரா­ஜன், ஒன்­றிய இளை­ஞ­ரணி அமைப்­பா­ளர் ஏ.ஜெகன், எம்.ஆர்.கே., கூட்­டு­றவு சர்க்­கரை ஆலை தொ.மு.ச தலை­வர் க.இரா­ஜா­ரா­மன், ஊராட்சி மன்ற தலை­வர்­கள் சாரங்­க­பாணி, மோகன், உள்­ளிட்ட, மாவட்ட ஒன்­றிய நகர பேர­ழக நிர்­வா­கி­கள் சார்பு பணி நிர்­வா­கி­கள் கலந்து கொண்­ட­னர்.

Tags

Next Story