நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்க அரசு துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஜி.கே.வாசன்
ஜி கே வாசன்
நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்க அரசு துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார். இதுக்குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், திருவண்ணாமலையில், மலைப்பகுதியில் நேற்று நிலச்சரிவு ஏற்பட்டு மண்ணில் குழந்தைகள் உள்பட 7 பேர் சிக்கியுள்ளார்கள் என்று வரும் தகவல் மிகுந்த அச்சத்தையும், வருத்தத்தையும் ஏற்படுத்தியுள்ளது. நிலச்சரிவு ஏற்பட்டு 24 மணி நேரம் ஆகியும் அவர்கள் மீட்கப்படாதது கவலையளிக்கிறது. தமிழக அரசு துரித நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்போது 2-வது முறையும் கோவிலுக்கு பின்புறம் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது மக்களிடையே மேலும் அச்சத்தையும், கவலையையும் ஏற்படுத்தியிருக்கிறது. அதோடு மேலும் நிலச்சரிவு ஏற்பட வாய்புள்ளதாக தகவல் வருகிறது. ஆகவே பேரிடர் மீட்புக் குழுவினர் நிலச்சரிவில் சிக்கியுள்ளவர்களை துரிதமாக மீட்கவும், மேலும் பாதிப்பு ஏற்படாதவாறு மக்களை காக்கவும் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். நிலச்சரிவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தமிழக அரசு உரிய மருத்துவ உதவிகளையும், நிவாரணமும் வழங்க வேண்டும். மக்களை காக்கும் பணிகளில் உரிய முன்னேற்பாடுகளை செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.