பொன்முடி மீதான வழக்கு விசாரணை வரும் 25ம் தேதிக்கு ஒத்திவைப்பு

பொன்முடி மீதான வழக்கு விசாரணை வரும் 25ம் தேதிக்கு ஒத்திவைப்பு

முன்னாள் அமைச்சர் பொன்முடி மீதான செம்மண் குவாரி வழக்கு விசாரணை வரும் 25ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

முன்னாள் அமைச்சர் பொன்முடி மீதான செம்மண் குவாரி வழக்கு விசாரணை வரும் 25ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

விழுப்புரம் கோர்ட்டில் நடந்து வரும் முன்னாள் அமைச்சர் பொன்முடி மீதான செம்மண் குவாரி வழக்கு 25ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. விழுப்புரம் மாவட்டம், வானூர் தாலுகா பூத்துறை கிராமத்தில், கடந்த (2006–11) திமுக ஆட்சியின்போது அரசு செம்மண் குவாரியை ஒப்பந்தம் எடுத்து, விதிமீறி அதிகளவில் செம்மண் எடுத்ததன் மூலமாக, அரசுக்கு ரூ.28.36 கோடி இழப்பை ஏற்படுத்தியதாக, முன்னாள் அமைச்சர் பொன்முடி, அவரது மகன் கவுதமசிகாமணி எம்.பி., ராஜமகேந்திரன், சதானந்தன், கோதகுமார், ஜெயச்சந்திரன், கோபிநாத், லோகநாதன் ஆகிய 8 பேர் மீது, கடந்த 2012-ம் ஆண்டில், விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இவ்வழக்கு விசாரணை, விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கில் 67 பேர் அரசு தரப்பு சாட்சிகளாக உள்ளனர். அவர்களில் இதுவரை 17 பேர் சாட்சியம் அளித்துள்ளனர். அதில், 14 பேர் அரசு தரப்புக்கு எதிராக பிறழ் சாட்சியம் அளித்துள்ளனர். தொடர்ந்து, சாட்சிகளிடம் விசாரணை நடந்து வருகிறது. நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது ஜெயச்சந்திரன், கோதகுமார், சதானந்தன், கோபிநாத் ஆகிய 4 பேர் ஆஜராகினர்.

முன்னாள் அமைச்சர் பொன்முடி, கவுதமசிகாமணி எம்.பி., ராஜமகேந்திரன் ஆகியோர் ஆஜராகவில்லை. அரசு தரப்பு சாட்சிகள் ஆஜராகவில்லை. இதையடுத்து வழக்கை விசாரித்த மாவட்ட முதன்மை நீதிபதி (பொறுப்பு) ஹெர்மிஸ், வழக்கின் விசாரணையை வரும் 25ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

Tags

Next Story