ராமநாதபுரத்தில் அதிமுக சார்பில் மனித சங்கிலி போராட்டம்

ராமநாதபுரத்தில் அதிமுக சார்பில் மனித சங்கிலி போராட்டம்

மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர் 

ராமநாதபுரத்தில் அதிமுக சார்பில் நடைபெற்ற மனித சங்கிலி போராட்டத்தில் முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜா பங்கேற்றார்.

ராமநாதபுரம் போதைப் பொருள் கடத்தல்காரர்களுக்கு பதவி வழங்கி அழகு பார்த்தது திமுக - அன்வர் ராஜா கடும் விமர்சனம்.தமிழகம் போதை பொருட்களின் தலைநகரமாக மாறியுள்ளதை கண்டித்து ராமநாதபுரத்தில், அதிமுக சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடந்து வருகிறது.

தமிழகம் போதை பொருட்களின் தலைநகரமாக மாறி, வருங்கால தலைமுறையினரின் எதிர்காலம் சீரழிகிறது. போதை பொருள் கடத்தலால் இந்திய அளவில் தமிழகத்துக்கு தலைகுனிவு ஏற்பட்டுள்ளது.

மேலும் ராமநாதபுரம் மாவட்டத்தில் தொடர்ந்து போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. மாவட்டம் கடத்தல் காரர்களின் மையமாக திகழ்ந்து வருகிறது. இதற்கெல்லாம் காரணமான தி மு க அரசை கண்டித்து,மாவட்ட தலைநகரான ராமநாதபுரத்தில், அதிமுகவினர் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த மனித சங்கிலி போராட்டமானது ராமநாதபுரம் புதிய பேருந்து நிலையத்திலிருந்து பழைய பேருந்து நிலையம் வரை கட்சி தொண்டர்கள் கைகோர்த்தபடி கருப்பு பேட்ஜ் அணிந்து வரிசையாக நின்று போராட்டத்தை நடத்தினர்.

இதில் கலந்துகொண்டு பேசிய அன்வர் ராஜா'போதைப்பொருள் கடத்தல் காரர்களுக்கு கட்சி பொறுப்பு கொடுத்து அழகு பார்த்த இந்த திமுக' ஆட்சியில் 'மாநிலம் முழுவதும் சந்து பொந்துகளிலும் பெட்டி கடைகளிலும் கூட போதை பொருள் தட்டுப்பாடு இன்றி கிடைப்பதாக' கடுமையாக சாடி பேசினார்.

இதில், தலைமை நிலைய செயலாளருமான அன்வர் ராஜா தலைமையில் நகரச் செயலாளர் பால்பாண்டியன், ராமநாதபுரம் ஒன்றிய செயலாளர் அசோக்குமார் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story