இராசிபுரம் தொகுதி பாஜக தேர்தல் அலுவலகம் திறப்பு - கே.பி.இராமலிங்கம்

இராசிபுரம் சட்டமன்றத் தொகுதி பாஜக தேர்தல் அலுவலகத்தை திறந்து வைத்து, மாநில துணைத் தலைவர் டாக்டர் கே.பி.இராமலிங்கம் பேட்டி அளித்தார்
நாமக்கல் மாவட்டம், இராசிபுரம் சட்டமன்றத் தொகுதி, பாரதிய ஜனதா கட்சி- தேர்தல் அலுவலகம் திறப்பு விழா, இராசிபுரம் அடுத்த தாளம்பள்ளம் பகுதியில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அக்கட்சியின் மாநில துணைத் தலைவர்/ சேலம் பெருங்கோட்ட பொறுப்பாளர் /பாராளுமன்ற தொகுதி பொறுப்பாளர் டாக்டர் கெ.பி.இராமலிங்கம், இராசிபுரம் சட்டமன்றத் தொகுதி, பாரதிய ஜனதா கட்சியின் தேர்தல் அலுவலகத்தை, திறந்து வைத்தார். தொடர்ந்து, இராசிபுரம் சட்டமன்ற தொகுதி சார்பில், கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. புதிய நிர்வாகிகள் கட்சியில் இணைந்து கொண்டனர். முன்னதாக, இக்கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநில துணைத்தலைவர் டாக்டர். கே.பி. இராமலிங்கம், வரும் 2024 பாராளுமன்ற தேர்தலில் முழுமையாக பணிகளை தொடங்கி, தமிழ்நாடு முழுவதும் 39 நாடாளுமன்ற தொகுதிகளிலும் தேர்தல் அலுவலகங்கள் திறக்கப்பட்டுள்ளன. அதனைத் தொடர்ந்து இப்பொழுது, அந்த நாடாளுமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட சட்டப்பேரவை தொகுதிகளில் தேர்தல் அலுவலகங்கள் திறக்கப்படுகின்றன. சேலம் மாவட்டத்தில் 6 தொகுதிகளுக்கும் திறக்கப்பட்டுள்ளன. நாமக்கல் நாடாளுமன்ற தொகுதியில் பரமத்தி வேலூரை அடுத்து, இராசிபுரத்தில் இன்று திறக்கப்பட்டுள்ளது. கோட்ட பொறுப்பாளர்கள், தொகுப்பு தலைவர்கள் இப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், தமிழகமெங்கும் தாமரை சின்னம் சுவர் விளம்பரங்கள் எழுதப்படுகிறது. வருகின்ற 27-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி, தமிழகத்திற்கு என் மண் என் யாத்திரை நிறைவு விழாவிற்கு நேரில் வந்து கலந்துகொள்கிறார். முன்னதாக அரவக்குறிச்சி, பல்லடம் உள்ளிட்ட பகுதிகளில் தொகுதியில் இந்த யாத்திரை 21-ம் தேதி நடைபெறும். பிரதமர் என் மண் என் மக்கள் யாத்திரை நிறைவு விழாவில் உரையாற்றுகிறார். அன்றைய தினமே தேர்தல் வியூகம் வகுக்கப்பட்டுவிடும். தமிழக அரசியலில் பாஜகவின் பயணம் குறித்து திட்டவட்டமாக அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கிறோம். வருகின்ற 17, 18 ஆகிய நாள்களில் தேசியக் குழு கூட்டம் பிரதமர் தலைமையில், தேசியத் தலைவர் நட்டா முன்னிலையில் நடைபெறுகிறது இக்கூட்டம் முடிவடைந்த பிறகு திட்டவட்டமான முடிவுகள் எடுக்கப்பட்டு விடும். ஏற்கனவே தமிழகத்தின் சார்பில் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் இப்பொழுது முருகன் அவர்களுக்கு மீண்டும் மத்திய பிரதேசத்தில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழ்நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினர் என்ற எண்ணிக்கையை நாங்கள் தொடங்கி விட்டோம். இந்த எண்ணிக்கை 39 வரை தமிழகத்தில் உயரும். இந்த முறை பாரத பிரதமர் நரேந்திர மோடி வேண்டுமா வேண்டாமா என்ற இரண்டு அணியில் தான் இருக்கும். கட்சிகள், கூட்டணிகள் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். தமிழ்நாட்டில் உரிமைக்காக இவர்களால் போராட முடியாது. பிரதமர் வேட்பாளர் யார் என்று கூட சொல்ல முடியாத கட்சிகளால் என்ன பயன் என்பதே தமிழக மக்களின் கேள்வியாக உள்ளது. தமிழ்நாடு அரசியல் பொறுத்த வரை இரண்டு அணி தான். பிரதமர் ஆட்சிக்கு வர வேண்டும் என்ற அணி ஒன்று, அவர் வேண்டாம் என்று கூறுகின்ற அணி ஒன்று. மூன்றாவது, நான்காவது அணிகள் எல்லாம் ஏதும் இல்லை. இராமர் கோவில் கட்டிய பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக வந்து, தேசத்தை காப்பார், தேசத்தின் பாதுகாப்பு, உயர்வு, பொருளாதாரம், அவர் கையில் உள்ளது. உலகம் முழுவதும் உள்ள இந்தியர்களுக்கு உரிய மரியாதை வரவேண்டும் என்றால் பிரதமர் மோடி தான் மீண்டும் வரவேண்டும். ஒட்டுமொத்த தேசத்தின் அக்கறை கொண்டுள்ள மக்களின் எண்ணம் மீண்டும் பிரதமராக மோடி வர வேண்டும் என்றே உள்ளது. அதிமுக, திமுக, பாமக, திமுக, தேமுதிக என எந்தக் கட்சியாக இருந்தாலும், தேச நலம் கருதுவோர், தாய்மார்கள், இளைஞர்கள் நாட்டின்மீது பற்று உள்ள அத்தனை பேரும் தேச நலனை கருத்தில் கொண்டு மீண்டும் பிரதமராக மோடி வரவேண்டும் என்ற எண்ணத்தில் உள்ளனர். இதில் கட்சி, அரசியல், குடும்ப வேறுபாடு ஏதும் கிடையாது. தேசத்தின் பாதுகாப்பு, கலாச்சாரம், பண்பாடு உயர்வு அத்தனையும் பாதுகாக்க வேண்டும் என்றால் மீண்டும் பிரதமராக நரேந்திர மோடி வர வேண்டும் என்பதுதான் அனைவரின் எண்ணமாக உள்ளது. மக்கள் பாஜக பக்கம் உள்ளனர். தேர்தல் நேரத்தில் மட்டுமே அரசியல் கட்சிகளின் தூண்டுதலின் பேரில் விவசாய போராட்டம் நடைபெறுகிறது. பிரதமருக்கு எதிராக வேறு எந்த ஆயுதத்தையும் பயன்படுத்த முடியாது என்ற நேரத்தில், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் விவசாயிகளை தூண்டிவிடுகின்றனர். அரசியலில் சாதிக்க முடியாமல் ஜாதி கட்சி தொடங்குவது போல விவசாயிகளை தூண்டி விடுகின்றனர். வடநாட்டை விட தமிழ்நாட்டில் தான் விவசாயிகளின் போராட்டத்தை அதிக அளவில் அரசியல் கட்சிகள் இங்கு பேசுகின்றனர். விவசாயிகளின் போராட்டத்தில் வன்முறை ஏற்படுமா, அதை கையில் எடுத்துக் கொண்டு விமர்சனம் செய்யலாமா என்ற எண்ணத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் திட்டம் போடுகின்றன. தமிழகத்தில், பாஜக நிர்வாகி ஒருவர் இன்று படுகொலை செய்யப்பட்டுள்ளார். இப்படி தினந்தோறும் பல்வேறு கொலை, கொள்ளை சம்பவங்கள் நீடிக்கின்றன. தமிழகத்தில் முதலமைச்சருக்கு சட்டம் ஒழுங்கு பாதுகாக்க தெரியவில்லை. தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஆளுநருக்கு எதிராக செயல்படுவது சரியல்ல. தற்போது சட்டப்பேரவை தலைவராக உள்ள அப்பாவு தகுதியற்றவர். காங்கிரசில் அவர் இருந்தபோது கருணாநிதியை பலமுறை விமர்சித்துள்ளார். ஆளுநர் மாநில அரசின் உரையை வாசிக்கவில்லை என்றால் அதை பட்ஜெட்டில் தமிழ்நாடு அரசு வைத்துக் கொள்ளலாம். அதை விடுத்து ஆளுநரை விமர்சிப்பது முறையல்ல. ஸ்டாலின் தலைமையில் உள்ள திமுக அரசு செயல்பாடற்று உள்ளது. சட்டப்பேரவையில் ஆளுநர் உரையின்போது ஏற்கனவே அறிஞர் அண்ணா, கருணாநிதி, உள்ளிட்டோரின் ஆட்சிக்காலத்தில் தேசிய கீதம் பாடப்பட்டது என்பதை ஆட்சியாளர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். பிரதமரை முன்னிறுத்தியே நாங்கள் நாடாளுமன்ற தேர்தலில் சந்திக்கின்றோம். அனைத்து தொகுதிகளிலும் தாமரை சின்னத்தில் போட்டியிடுவதே தொண்டர்களின் விருப்பமாக உள்ளது. தமிழ்நாடு முழுவதும், அதிமுக உள்பட, தாமரை சின்னத்தில் போட்டியிடுவோர் கூட்டணியில் சேரலாம். தமிழ்நாட்டிற்கு மீண்டும் அமைச்சர் முருகன் அவர்களுக்கு வாய்ப்பு அளித்து கொடுத்ததற்கு பாரதப் பிரதமருக்கும் தேசிய தலைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். எம்.எஸ். சுவாமிநாதனுக்கு பாரத ரத்னா அளித்ததற்கும் பாஜக நன்றி தெரிவித்துக் கொள்கிறது என்றும் பாஜக மாநில துணைத்தலைவரும் சேலம் பெருங்கோட்ட பொறுப்பாளருமான டாக்டர் கே.பி. இராமலிங்கம் இராசிபுரத்தில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில், பாஜகவின் நாமக்கல் மாவட்டத் தலைவர்கள் என்.பி சத்தியமூர்த்தி எம். இராஜேஷ்குமார், நாமக்கல் பாராளுமன்ற இணை பொறுப்பாளர் சுதிர்முருகன், இராசிபுரம் சட்டமன்ற அமைப்பாளர், மாவட்ட துணை தலைவர் பி. முத்துசாமி, மாவட்ட மகளிர் அணி தலைவர் N. சித்ரா, பொறுப்பாளர் சி. வடிவேல், மாவட்ட பொது செயலாளர் சேதுராமன், மாவட்ட துணை தலைவர் ஹரிஹரன், மாவட்ட செயலாளர் திவ்யா, மாவட்ட துணை அமைப்பாளர்கள் வழக்கறிஞர் ஆர்டி இளங்கோ, சுகன்யா நந்தகுமார், ராசிபுரம் நகர தலைவர் வேலு, மற்றும் வெங்கடேஷ், தொகுதி ராஜா,குமார், மேலும் மாநில-மாவட்ட நிர்வாகிகள், மண்டல தலைவர்கள், அணி பிரிவு நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள், நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தல் மேலாண்மைக்குழு நிர்வாகிகள் உள்பட பலரும் கலந்துகொண்டனர். தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில், கிராமம் தோறும் தேர்தல் பணிகளை மேற்கொள்வது மற்றும் கிளைத் தலைவர்கள், பார்வையாளர்கள் கூட்டம் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

Tags

Next Story