இந்தாங்க அல்வா: நூதன முறையில் அர்ஜுன் சம்பத் பிரச்சாரம்

இந்தாங்க அல்வா: நூதன முறையில் அர்ஜுன் சம்பத் பிரச்சாரம்

அர்ஜூன் சம்பத்

கும்பகோணத்தில் அல்வா கொடுத்து நூதன முறையில் அர்ஜுன் சம்பத் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

அல்வா கொடுத்து நூதன முறையில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட அர்ஜுன் சம்பத்... மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதி வேட்பாளர் ம.க. ஸ்டாலின் அவர்களை ஆதரித்து இந்து மக்கள் கட்சி நிறுவன தலைவர் அர்ஜுன் சம்பத் திரு நாகேஸ்வரம், கும்பகோணம் உச்சி பிள்ளையார் போன்ற பகுதிகளில் பரப்புரை மேற்கொண்டார்.


பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அர்ஜுன் சம்பத்... திமுக ஆட்சி அமைந்த உடன் 100 நாட்களில் கும்பகோணத்தை தலைமை இடமாகக் கொண்டு புதிய மாவட்டமாக உருவாக்குவோம் என வாக்குறுதி அளித்த திமுக 3 ஆண்டுகள் கடந்தும், தற்போது நாடாளுமன்ற தேர்தல் பொழுதும் 2 தினங்களுக்கு முன்பு பிரச்சாரம் மேற்கொண்ட உதயநிதி இதே வாக்குறுதியை அளித்துள்ளார் இதிலிருந்து திமுக பொய்ப் பிரச்சாரத்தில் ஈடுபடுவது அம்பலமா கியுள்ளது.


மயிலாடுதுறை தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் ம.க.ஸ்டாலின் மீதும் பாட்டாளி மக்கள் கட்சி மீதும் ஒரு சாதி அடையாளத்தை உருவாக்கி இதன் மூலம் ஆதாயம் தேட நினைக்கின்றது திராவிட மாடல் ஆச்சி, பாட்டாளி மக்கள் கட்சி என்பது சமூக நீதிக்கான கட்சி சட்ட மாமேதை அண்ணல் அம்பேத்கர் அவர்களுக்கு தமிழகத்தில் 7க்கும் மேற்பட்ட சிலைகளை பாட்டாளி மக்கள் கட்சி தான் நிறுவி உள்ளது, அதேபோன்று ம.க. ஸ்டாலின் அவர்களும் பிரச்சார செல்லுகின்ற இடத்தில்,

எல்லாம் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துவது நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது இதை பொறுத்துக் கொள்ள முடியாமல் அவரை ஜாதியின் அடையாளத்துக்குள் சிக்க வைக்க நடக்கும் சதி திட்டத்தை முறியத்துள்ளார் கும்பகோணம் மாநகராட்சியில் 3000 கோடி ரூபாய்க்கு மேல் பணிகள் நடைபெற்றுள்ளதாக உதயநிதி தெரிவித்துள்ளார், ஆனால் எங்கு பார்த்தாலும் குண்டும்,

குழியுமாகவும், பாதாள சாக்கடைகள் குடிநீர் போன்ற அடிப்படை வசதிகள் கூட செய்யப்படாமல் உள்ளது என்பது கும்பகோணம் மக்களே தெரிவிக்கின்றனர் சென்னையில் மழை வெள்ளத்தின் போது 4000 கோடி பேக்கேஜ் போல் கும்பகோண மாநகராட்சியில் 3000 கோடி பேக்கேஜ் பணிகள் நடைபெற்றுள்ளதாக தெரிகிறது ஆக மொத்தமாக மக்களுக்கு நன்மை செய்ய திமுக யோசிக்க வில்லை என்பது அம்பலமாகியுள்ளது.


ஜிஎஸ்டி வரியில் 29 பைசா மத்திய அரசு தருவதாக பொய் பிரச்சாரம் செய்து வருகின்றனர், உண்மையாக ஜிஎஸ்டி வரியில் 50 சதவிகிதம் அந்தந்த மாநிலத்திற்கும் மேலும் கூடுதலாக 23 சதவீதம் மத்திய அரசுகளால் மாநிலங்களுக்கு அளிக்கப்பட்டு வருகிறது அந்த கணக்கீடு படி தமிழகத்திற்கும் 73 சதவீதத்துக்கு மேல் மத்திய அரசு அளித்து வருகின்றது.. தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் மயிலாடுதுறை பாராளுமன்றத்தில் வெற்றி பெற்றால் தான் கும்பகோணம் தனி மாவட்டம்,

மகாமக திருவிழாவை தேசியத் திருவிழாவாகவும். கும்பகோணம் ஸ்மார்ட் சிட்டி, விவசாயிகளுக்கு பாதுகாக்கப்பட்ட நெல் குடோன், புதிய ரயில் சேவை, மீனவர்களின் வாழ்வாதாரம், மருத்துவம், இன்ஜினியரிங், வேளாண்மை, கல்லூரிகள் கொண்டு வர பாரத பிரதமரை எளிதான முறையில் அணுகி பெற்றுத் தர ஏதுவாக இருக்கும், எனவே மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதி பொதுமக்கள் மாம்பழ சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என தெரிவித்தார்.

Tags

Next Story