நாடாளுமன்ற தோ்தல் குறித்து தேமுதிக பிரேமலதா விஜயகாந்த் பேட்டி

நாடாளுமன்ற தோ்தல் குறித்து தேமுதிக பிரேமலதா விஜயகாந்த் பேட்டி

நாடாளுமன்ற தோ்தல் குறித்து மாவட்ட செயலாளா்கள் கருத்தை தெரிவித்தேன் - தேமுதிக பிரேமலதா விஜயகாந்த் பேட்டி

நாடாளுமன்ற தோ்தல் குறித்து மாவட்ட செயலாளா்கள் கருத்தை தெரிவித்தேன் - தேமுதிக பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
அனைத்து தொகுதிகளிலும் தனித்து போட்டியிடலாம் என்பது பெரும்பான்மை மாவட்ட செயலாளர்களின் கருத்தாக இருந்தது. அதை விட்டால் ஒன்று திமுக கூட்டணி,அதிமுக ,பாஜக கூட்டணி என 3 வழிகள் உள்ளது. மாவட்ட செயலாளர்கள் சொன்னது 2014 இல் ஒதுக்கப்பட்டது போல சீட்டுகள் 14 சீட்டுகள் கொடுத்து மரியாதையுடன் வழி நடத்தவங்களுடன் கூட்டணி அமைப்போம் என்பது அவர்கள் கருத்து இது தலைமையின் கருத்தோ என்னுடைய கருத்தோ கிடையாது‌ அன்று நடந்தது ஆலோசனை கூட்டம் மட்டும்தான். ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட செயலாளர்களின் கருத்தை மட்டும் தான் உங்களிடம் தெரிவித்தேன் அதனால் மீண்டும் இன்றைக்கு தெரிவித்துக் கொள்கிறேன் அடுத்த ஆலோசனை கூட்டம் நடந்து அதை இறுதி முடிவு எடுத்து அதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு எப்பொழுது வருகிறதோ அதுதான் உண்மையான அறிவிப்பு இந்த மறைமுகமும் இதற்கு கிடையாது இது தேர்தல் அரசியல் இதில் மறைமுகமாக பேச வேண்டிய அவசியமும் ஒன்றும் இல்லை... கூட்டணிக்கு தலைமை ஏற்று இருப்பவர்கள் அதிமுக கூட்டணி திமுக கூட்டணி பாஜக கூட்டணி அந்த தலைமை கூட்டணி ஏற்று இருப்பவர்கள் தான் இதை பத்தி பேசுவதை தொடங்க வேண்டும் நாங்கள் தலைமை ஏற்று இருந்தால் நாங்கள் பேச்சு வார்த்தை தொடர்ந்து இருப்போம்... அனைத்து கட்சிகளும் எங்களுடன் நட்புறவு தான் இருக்கிறார்கள் ஆனால் தேர்தலுக்கான அதிகாரப்பூர்வமான பேச்சுவார்த்தை இன்றும் தொடங்கவில்லை அதை நான் தெளிவாக தெரிவித்துக் கொள்கிறேன் அதனால் கூட்டணி தலைமை ஏற்று இருப்பவர்கள் தான் இதற்கான துவக்கத்தை ஆரம்பிக்க வேண்டும் அதிமுக கூட்டணியோ தி.மு.க கூட்டணியோ பிஜேபி கூட்டணியோ கூட்டணி தலைமை ஏற்று இருப்பவர்கள் இதற்கான தொடக்கத்தை தொடங்கி எங்களுடன் குழுவிடம் வந்து பேசும் பொழுது அதற்கான நிச்சயமாக இறுதி நிலைப்பாடு என்பது உங்களுக்கு நாங்கள் தெரிவிப்போம். இன்று ஆலோசனை கூட்டம் இருக்கிறது யார் யாரை அந்த குழுவில் சேர்க்கவிருக்கிறோம் என்று இன்றைக்கு ஆலோசனை கூட்டம் நடக்கவிருக்கிறது உங்களைப் பொறுத்தவரையில் இது முதல் ஆலோசனை கூட்டம் மட்டும்தான் இறுதி நிலைப்பாடு நிச்சயமாக உங்களுக்கு அறிவிப்போம் அனைத்து கட்சிகளிடம் ராஜ்யசபா எம்பிகள் இருக்கிறார்கள் அப்பொழுது தேமுதிக சீட்டு கேட்பதில் என்ன தவறு இருக்கிறது. மற்ற கட்சிகளிலும் ராஜ்யசபா உறுப்பினர்கள் இருக்கும் பொழுது எங்களுக்கும் இருப்பதில் என்ன தவறு இருக்கிறது... ஒவ்வொரு முறையும் கவர்னர் சட்டசபைக்கு வரும்போது இது ஒரு தொடர் கதையாக நடந்து கொண்டிருக்கிறது... இது நாட்டின் மக்களுக்கும் ஆரோக்கியமான விஷயம் கிடையாது..

Tags

Next Story