ரயில் இயக்குவது அரசின் கடமை - அமைச்சர் மனோ தங்கராஜ்
எல்லோரின் அழுத்தத்தால் தான் பாஜக அரசு வந்தே பாரத் ரயிலை குமரி வரை ரயிலை தற்போது நீட்டிப்பு செய்துள்ளது.அதனை பாரதிய ஜனதா கொண்டு வந்தது போன்று பேசுவதில் அர்த்தம் இல்லை. ரயில் இயக்குவதை அரசியலாக்க வேண்டிய அவசியம் இல்லை. ரயில் இயக்குவது அரசின் கடமை என அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்தார்.
குமரி மாவட்டத்தில் வந்தே பாரத் ரயில் இயக்கம் தொடர்பாக பாரதிய ஜனதா, .காங்கிரஸ் கட்சியினரிடையே பனிப்போர் நிலவி வருகிறது. இந்த நிலையில் அமைச்சர் மனோதங்கராஜ் நிருபர்களிடம் கூறியதாவது:- வந்தே பாரத் ரயில் திருநெல்வேலி வரை தான் முதலில் இயக்கப்பட்டது. அந்த நேரத்தில் கன்னியாகுமரி மாவட்டம் புறக்கணிக்கப்பட்டது. குமரிக்கு அந்த ரயிலை இயக்க வேண்டும் என்று கோரிக்கையை அனைத்து அரசியல் கட்சியினரும் வைத்தனர். அதே கோரிக்கையை குமரி எம் பி யும் வைத்திருந்தார். அனைவரது கோரிக்கையை ஏற்று பாரதிய ஜனதா அரசு ரயிலை குமரி வரை தற்போது நீட்டித்துள்ளது. எல்லோரின் அழுத்தத்தால் தான் பாரதிய ஜனதா அரசு ரயிலை தற்போது நீட்டிப்பு செய்துள்ளது. அதனை பாரதிய ஜனதா கொண்டு வந்தது போன்று பேசுவதில் அர்த்தம் இல்லை. ரயில் இயக்குவதை அரசியலாக்க வேண்டிய அவசியம் இல்லை. ரயில் இயக்குவது அரசின் கடமை. இதற்கும் தேர்தலுக்கும் சம்பந்தமில்லை. என்று கூறினார்
Next Story