தற்போது தான் என்னுடைய என்ட்ரி ஆரம்பித்துள்ளது: சசிகலா
சசிகலா
சென்னை போயஸ் கார்டனில் உள்ள தனது இல்லத்தில் சசிகலா பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த தனது தொண்டர்களை சசிகலா சந்தித்து பேசினார். அப்போது பேசியவர், அதிமுக இன்று மூணாவது இடத்திற்கு நாலாவது இடத்திற்கு போய்விட்டது, டெபாசிட் இழந்திருக்கிறது, இதற்கு என்ன காரணம்.
பொதுமக்களைப் பொருத்தவரை அதிமுக மீது மதிப்பு ஜாஸ்தி, நம் கட்சிக்காரர்கள் மக்களோடு இணக்கமாக பொறுமையாக சொல்வார்கள். தற்போது தானும் கெட்டு கட்சியும் கெடுக்க கூடாது என்பதுதான் எனது கோரிக்கையாக வைக்கிறேன். தற்போது நல்ல நேரம் நமக்கு வந்துள்ளது, தொண்டர்கள் எதைப் பற்றியும் கவலைப்பட வேண்டாம்,
நான் சொல்லி வந்ததற்கு இதுதான் சரியான நேரம். நம்மைப் பொருத்தவரை நான் மிக உறுதியாக இருக்கிறேன், அதிமுக கட்சி முடிந்து போய்விட்டது என்று நினைக்க கூடாது, தற்போது தான் என்னுடைய என்ட்ரி ஆரம்பித்துள்ளது. தமிழ்நாட்டு மக்கள் நம் பக்கம் உள்ளார்கள், அம்மாவுடைய ஆட்சி தமிழ்நாட்டில் அமைப்போம். தனி பெரும் கட்சியாக அமைத்து,
நான் எப்பொழுதும் நிறைய பேசுவதில்லை, ஒரு குறிப்பிட்ட நேரத்தில் தான் பேசுவேன், அதற்கான நேரம் வந்துவிட்டது, இன்று திமுகவின் சலசலப்பு எல்லாம் எப்படி ஆகப்போகுது என்பதை நீங்கள் பாருங்கள், நான் கேட்கும் கேள்விகளுக்கு எல்லாம் திமுக பதில் சொல்லியாக வேண்டும்,
நிச்சயமாக தமிழக மக்களுக்கு ஒரு நல்ல ஆட்சி அமையும், திமுகவின் கோரப்பிடியில் இருந்து தமிழ்நாட்டு மக்களை காக்க வேண்டும் என்றால் நாம் கண்டிப்பாக வந்து ஆக வேண்டும்.எனக்கு இரு கண்கள் ஒன்று தொண்டர்கள் மற்றொன்று தமிழக மக்கள். நீங்கள் கவலைப்பட வேண்டாம் தமிழ்நாடு மக்களுக்கு அம்மா போகும் போது சொல்லிருந்த விஷயத்தை நாம் செய்வோம் என்றார்.