உரிய நடவடிக்கை எடுத்த பிறகும் எதிர்க்கட்சிகள் அரசியல் செய்ய பார்க்கிறார்கள்: கனிமொழி

உரிய நடவடிக்கை எடுத்த பிறகும் எதிர்க்கட்சிகள் அரசியல் செய்ய பார்க்கிறார்கள்: கனிமொழி

Kanimozhi

அண்ணா பல்கலை. சம்பவத்திற்கு உரிய நடவடிக்கை எடுத்த பிறகும் எதிர்க்கட்சிகள் அரசியல் செய்ய பார்க்கிறார்கள் என தி.மு.க. எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த தி.மு.க. எம்.பி. கனிமொழி, மணிப்பூர் போன்ற மாநிலங்களில் பாதிக்கப்பட்டுள்ள பெண்களுக்கு இன்று வரை நியாயம் கிடைக்கவில்லை. அங்கு நம்முடைய பிரதமர் அங்கு சென்று என்ன என்று கூட கேட்கவில்லை. அண்ணா பல்கலைக்கழகத்தில் ஒரு குற்றம் நடந்து இருக்கிறது. ஒரு பெண் பாதிக்கப்பட்டுள்ளார். நம்முடைய காவல்துறை உடனடியாக நடவடிக்கை எடுத்திருக்கிறது. காவல்துறை நடவடிக்கை எடுத்த பிறகு, வழக்கு கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. நீதிமன்றத்தில் வழக்கு சரியாக நடத்தப்பட்டு, குற்றவாளிக்கு நியாயமான தண்டனை கிடைப்பதுதான் அந்த பெண்ணுக்கான நியாயம் கிடைத்ததாக இருக்கும். நாம் அதில் தான் கவனம் செலுத்த வேண்டும். அண்ணா பல்கலை. சம்பவத்திற்கு நான் என்னுடைய கண்டனத்தை தெரிவித்து இருக்கிறேன். பொள்ளாச்சி சம்பவம் போல் குற்றவாளிகளை காப்பாற்றக்கூடிய ஒரு நிலை இல்லை. குற்றவாளி யாராக இருந்தாலும் கைது செய்யப்பட வேண்டும் என்று முதலமைச்சர் தெரிவித்துள்ளார். நீதிமன்றம் நியாயமாக தீர்ப்பு வழங்க வேண்டும். வழக்கு சரியாக நடத்தப்படுகிறா என்பதை கண்காணிக்க வேண்டும். விசாரணையில் 'யார் அந்த சார்'... என்பது வெளிப்படலாம். அல்லது அப்படி ஒரு நபர் இல்லை என்பதும் தெரிய வரலாம். நிர்பயா வழக்கில் கூட பா.ஜ.க.வில் சில பேர் 'அண்ணா' என்று சொல்லி இருந்தால் விட்டுருப்பார்கள் என்று சொன்னார்கள். நான் அப்படி சொல்லவில்லை. நடவடிக்கை எடுத்த பிறகு போராடக்கூடிய ஒரு சூழல் இருக்கும்போது, எதிர்க்கட்சி அதை கையில் எடுத்துக்கொண்டு அரசியலாக்கத்தான் பார்க்கிறார்கள். எப்.ஐ.ஆர். வெளியானதற்கு தமிழக அரசு காரணம் இல்லை. அண்ணாமலை சவுக்கால் அடித்துக்கொண்டதற்கு நான் என்ன சொல்ல முடியும். ஆடுகள் அடைக்கும் இடத்தில் ஆடுகளை விட்டு விட்டு ஏன் மனுஷங்களை அடைக்கப்போகிறார்கள் என்று கூறினார்.

Tags

Next Story