கும்பகோணம் மகாமக விழா தேசிய திருவிழாவாக கொண்டாடப்படும்: பாமக வேட்பாளர்

கும்பகோணம் மகாமக விழா தேசிய திருவிழாவாக கொண்டாடப்படும்: பாமக வேட்பாளர்

வாக்கு சேகரித்த பாமக வேட்பாளர் 

உலகப் புகழ்பெற்ற கும்பகோணம் மகாமக பெருவிழா தேசிய திருவிழாவாக கொண்டாடப்படும் என பாமக வேட்பாளர் தெரிவித்துள்ளார்.

தேசிய ஜனநாயக கூட்டணியில் பாமக சார்பில் மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் ம.க. ஸ்டாலின் ஆறாவது நாள் பிரச்சாரத்தை கும்பகோணம் மேற்கு வடக்கு ஒன்றியங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் இன்று தொடங்கினார்.

கும்பகோணம் அருகே கருப்பூரில் உள்ள புகழ்பெற்ற பெற்ற காளியம்மன் கோயிலில் சிறப்பு வழிபாடுகள் மேற்கொண்டார். தொடர்ந்து அவர் பேசுகையில் முன்பிருந்த எம்பிக்கள் மயிலாடுதுறையை தொகுதியை குட்டி துபாய் ஆக்குவேன் என்று கூறி வெற்றி பெற்றனர் தொகுதியில் வளர்ச்சிக்கு எந்த வகையிலும் பாடுபடவில்லை

மயிலாடுதுறை தொகுதியில் போட்டியிடும் என்னை மக்கள் வெற்றி பெற செய்தால் மயிலாடுதுறை தொகுதியை குட்டி சிங்கப்பூர் ஆக்குவேன் என்றும் உலக புகழ்பெற்ற கும்பகோணம் மகாமக பெருவிழா நிச்சயமாக தேசிய திருவிழாவாக கொண்டாடப்படும், கும்பகோணத்தை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் உருவாக்கப்படும் நாச்சியார் கோவில், திருப்பனந்தாள்,

அம்மாபேட்டை உள்ளிட்ட ஒன்றியங்கள் தாலுகாவாக தரம் உயர்த்தப்படும், மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதியில் விவசாயிகள் நலம் சார்ந்து வேளாண் கல்லூரி, பொதுமக்கள் நலன் கருதி மருத்துவக் கல்லூரி, மற்றும் சட்டக் கல்லூரிகள் அமைக்கப்படும் மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதியை தொழில் வளம் மிக்க தொகுதியாக உருவாக்கப்படும் என்றும் பரப்பரை செய்தார் ‌‌.

தொடர்ந்து தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளான பாஜக, பாமக, தமாக, அமமுக, அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழு, ஐஜேகே, தமமுக, இமகமுக, ததேக, உள்ளிட்ட கூட்டணி கட்சிகளை சேர்ந்த 500க்கும் மேற்பட்ட தொண்டர்கள்

இருசக்கர வாகனத்தில் சுட்டெரிக்கும் வயலில் ஆரவாரத்துடன் கும்பகோணம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கருப்பூர் மணஞ்சேரி கள்ளப்புலியூர் சோழபுரம் தேவனாம்சேரி உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.

Tags

Next Story