உச்சக்கட்ட பரிதாபத்தில் ஓபிஎஸ் - ஆறுதலுகாக 4 சீட் கொடுக்கும் பாஜக..!

உச்சக்கட்ட பரிதாபத்தில் ஓபிஎஸ் - ஆறுதலுகாக 4 சீட் கொடுக்கும் பாஜக..!

பாஜக கூட்டணியில் ஓபிஎஸ், டிடிவி தினகரன்

நட்சத்திர ஹோட்டலில் நள்ளிரவில் பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்திய ஓ. பன்னீர்செல்வம்

நாடாளுமன்ற தேர்தலில் ஓ.பன்னீர்செல்வம் அணிக்கு 4 தொகுதிகள் ஒதுக்க பாஜக முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. பாஜகவுடன் கூட்டணி வைப்பதாக ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரன் அறிவித்தனர். அதன்படி சென்னை கிண்டியில் ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரனுடன் பேச்சுவார்த்தை நடத்திய பாஜக தலைமை நிர்வாகிகள், இருவருக்கும் தலா 4 தொகுதிகள் ஒதுக்க முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

பிரதமர் மோடி அண்டப்புளுகு, ஆகாசப்புளுகு பேசுவதாக முதலமைச்சர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார். பொள்ளாசியில் பேசிய அவர், ”பிரதமர் மோடி தமிழ்நாட்டுக்கு வரும் திட்டங்களை மாநில அரசு தடுப்பதாக பொய் சொல்லுகிறார். மத்திய அரசு கொண்டு வந்த எந்த திட்டங்களை மாநில அரசு தடுத்தது? அண்டப்புளுகு, ஆகாசப்புளுகு, இது மோடி புளுகு”என்றார். சென்னைக்கு வந்த பிரதமர் மோடி மாநில அரசை விமர்சித்ததற்கு பதிலடியால் ஸ்டாலின் பேசியுள்ளார்.

சென்னை நட்சத்திர ஹோட்டலில் நடந்த பேச்சுவார்த்தையில் ஓ.பன்னீர்செல்வத்துக்கு 4 தொகுதிகளை ஒதுக்க பாஜக முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி இல்லை என்று அதிமுக திட்டவட்டமாக கூறியுள்ளது. இந்த தேர்தலில் தமிழகத்தில் வெற்றிப்பெற வேண்டும் என்று தீவிரம் காட்டி வரும் பாஜக, மற்ற அரசியல் தலைவர்களுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

அதேநேரம் அதிமுகவில் இருந்து ஓரங்கட்டப்பட்ட ஓ.பன்னீர்செல்வம் வேறு வழியில்லாமல் டிடிவி பக்கமும், பாஜக பக்கமும் ஆதரவை எதிர்பார்த்துள்ளார். பாஜகவுடன் கூட்டணி வைப்பதாக பன்னீர்செல்வம் அறிவிரித்திருந்தார். டிடிவி தினகரனும் பாஜகவுக்கு பக்கம் சென்றுள்ளார். இந்த நிலையில் கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை சென்னை கிண்டியில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்றது.

பாஜக நிர்வாகிகளை டிடிவி தினகரன் மற்றும் ஓபிஎஸ் சந்தித்து பேசினர். நள்ளிரவு வரை நடைபெற்ற பேச்சுவார்த்தையில், அதிமுகவுக்கு 4 இடங்களை ஒதுக்க பாஜக முன்வந்துள்ளது. கூட்டணி பேச்சுவார்த்தையில் பாஜகவிடம் 6 இடங்களை ஓ.பன்னீர்செல்வம் கேட்ட நிலையில், நான்கு இடங்கள் மட்டுமே தருவோம் என பாஜக கரார் கட்டியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நான்கு இடங்களும் எடப்பாடிக்கு பிரஷர் கொடுக்கவே, ஓபிஎஸ்க்கு தொகுதி ஒதுக்க பாஜக முடிவெடுத்துள்ளதாக பேச்சுகள் அடிப்படுகிறது.

அதேநேரம் டிடிவி தினகரனின் அமமுக கட்சி பாஜக கூட்டணியில் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. அந்த கட்சிக்கும் 4 தொகுதிகளை பாஜக ஒதுக்கியுள்ளதாக கூறப்படுகிறது. இதேபோல் பாமக மற்றும் தேமுதிகவுடனும் பாஜக கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. அது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் பாமகவுடன் பாஜக கையெழுத்திட உள்ளதாகவும் கூறப்படுகிறது. பாஜக கூட்டணியில் 7 மக்களவை தொகுதி மற்றும் ஒரு அமைச்சர் பதவியை பாமக கேட்டுள்ள நிலையில் இறுதிக்கட்ட ஆலோசனையில் பாஜக மேலிடம் உள்ளது.

Tags

Next Story