தேர்தல் ரிசல்ட் அவுட்: மண்ணை கவ்வும் பிரதமர் மோடி..?

தேர்தல் ரிசல்ட் அவுட்: மண்ணை கவ்வும் பிரதமர் மோடி..?
2024- ம் ஆண்டு தேர்தல் கருத்துக் கணிப்பு
தமிழகத்தில் 39 தொகுதிகளிலும் பாஜகவுக்கு சம்மட்டி அடி விழும் என்று கூறிய மக்கள்

நாடாளுமன்ற தேர்தலில் எந்தெந்த மாநிலங்களில் ஆட்சி மாற்றம் ஏற்படும், யார்-யார் கைகள் ஓங்கப்படும் என்று நாடு முழுவதும் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பில், தமிழகத்தில் 39 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றிப்பெறும் என்று கூறப்பட்டுள்ளது.

விரைவில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறுவதை ஒட்டி கூட்டணி மற்றும் தொகுதி பங்கீட்டில் பிரதான கட்சிகள் ஈடுபட்டு வருகின்றன. மத்தியில் ஆளும் பாஜக தென் மாநிலங்களில் அதிக கவனம் செலுத்தி வருகின்றன. குறிப்பாக தமிழகத்தில் ஒருசில தொகுதிகளில் வெற்றிப்பெற வேண்டும் என்ற கொள்கையில் பாஜக செயல்பட்டு வருகிறது. அதனால், கடந்த இரண்டு மாதங்களில் 4 முறைக்கு மேல் பிரதமர் மோடி தமிழகம் வந்து சென்றுள்ளார். வரும் 22ம் தேதி பிரதமர் மோடி மீண்டும் தமிழகம் வர உள்ளார்.

இப்படி தமிழகத்தை டார்கெட் செய்து பாஜக செயல்படும் அதேவேளையில், தோழமை கட்சிகளின் கூட்டணியை உறுதி செய்த திமுக, தொகுதி பங்கீட்டை நிறைவு செய்துள்ளது. இந்த முறை திமுகவுடன் புதிதாக மக்கள் நீதி மய்யம் கட்சியும் இணைந்துள்ளன. புதிதாக காங்கிரஸ் கட்சிக்கு 10 சீட்டுகளை திமுக வாரி வழங்கியுள்ளது. தேர்தலில் பாஜகவுக்கு ஒரு இடத்தை கூட விட்டு கொடுக்க கூடாது என்ற முனைப்போடு செயல்பட்டு வரும் திமுக, நீங்கள் நலமா...?, இல்லம் தோறும் ஸ்டாலின் குரல் உள்ளிட்ட திட்டங்களை செயல்படுத்தி ஒவ்வொரு தொகுதிக்கும் எம்.எல்.ஏ. மற்றும் அமைச்சர்களை களமிறக்கி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார் முதலமைச்சர் ஸ்டாலின்.

இந்த சூழலில் தனியார் ஊடக நிறுவனமும், சி வோட்டர்ஸ் இணைந்து தேர்தல் கருத்துக் கணிப்பை நடத்தியுள்ளன. அதில், தென்னிந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் பாஜகவுக்கு ஒரு தொகுதி கூட கிடைக்காது என்று கணிக்கப்பட்டுள்ளது. மாநிலத்தில் உள்ள 39 தொகுதிகளிலும் திமுக கூட்டணியே வெற்றிப்பெற வாய்ப்புள்ளது என்றும் தெரிய வந்துள்ளது. தேர்தல் கருத்துக் கணிப்பில் திமுக கூட்டணிக்கு 54 சதவீதத்துக்கு அதிகமான வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர். இம்முறை பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக விலகி இருப்பதாலும், அக்கட்சியில் நிலவும் உட்கட்சி பூசலும், அதிமுகவுக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளன. இதனால் தேர்தலில் அதிமுக, பாஜகவுக்கு ஒரு இடம் கூட கிடைக்காது என மக்கள் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

தமிழகத்தின் அண்டை மாநிலமான கேரளாவில் காங்கிரஸ் கட்சிக்கு வாய்ஸ் அதிகம் இருப்பதால் மொத்தமுள்ள 20 தொகுதிகளில் 16 தொகுதிகள் ராகுல்காந்திக்கு ஆதரவாகவே உள்ளன. இடதுசாரிகள் கட்சிகள் சில இடங்களில் வெற்றிப்பெறலாம் என கூறப்படுகிறது.

வட இந்தியாவில் பிரதமர் மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில் மொத்தமுள்ள 26 மக்களவை தொகுதிகளையும் பாஜக கைப்பற்றுவது உறுதியாகியுள்ளது. பிரதமர் மோடியால் குஜராத்தில் பாஜகவுக்கு மட்டுமே 63 சதவீத வாக்குகள் உறுதியாகியுள்ளன.

இதேபோல் நாட்டிலேயே அதிக தொகுதிகளை கொண்ட உத்தரபிரதேசத்தில் வேறெந்த தொகுதிக்கும் கிடைக்காத வாய்ப்பு பாஜகவுக்கு கிடைத்துள்ளது. மாநிலத்தில் உள்ள 80 மக்களவை தொகுதிகளில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 74 இடங்களில் வெற்ரிப்பெறலாம் என்றும், காங்கிரஸ்க்கு ஒரே ஒரு இடம் மட்டுமே கிடைக்கும் என்றும் கருத்து கணிப்பில் கூறப்பட்டுள்ளது.

இதேபோன்று இமாச்சல பிரதேசம், ஜம்மு காஷ்மீர், ராஜஸ்தான், உத்தரகாண்ட் மாநிலங்களிலும் பாஜக கட்சி தான் வெற்றிப்பெறும் என கருத்துக்கணிப்பு முடிவுகள் கூறுகின்றன.

Tags

Read MoreRead Less
Next Story