மக்களவை தேர்தல் நாட்டை பாதுகாப்பதற்கான தேர்தல் - கனிமொழி எம்.பி

தொழில் நகரமான திருப்பூர் ஒன்றிய அரசின் ஜி.எஸ்.டி யால் பாதிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு நாளும் மதம், மொழி பெயரால் நம்மை பிரித்து காயப்படுத்தி வருகிறார்கள். இந்த நாடு அனைவருக்குமான நாடு. இதன் அடிப்படை யாரும் அழிக்க கூடாது என நம் திராவிட அரசு போராடி வருகிறது. நம் பிள்ளைகளுக்கான பாதுகாப்பை நம் தான் உருவாக்க முடியும். வரும் தேர்தல் வெறும் ஆட்சிக்கான தேர்தலாக இல்லாமல் நாட்டை பாதுகாப்பதற்கான தேர்தலாக இருக்க வேண்டும் என கனிமொழி எம்.பி தெரிவித்தார்.

நாடாளுமன்ற தேர்தலுக்காக திமுகவின் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவினர் திருப்பூர் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, மக்களை நேரில் சந்தித்து பரிந்துரைகளை பெறுகின்றனர். 2024 மக்­க­ளவை தேர்­த­லை­யொட்டி, தேர்­தல் அறிக்கை தயா­ரிப்­ப­தற்­காக தி.மு.க. துணைப் பொதுச்­செ­ய­லா­ளர் கனி­மொழி கருணாநிதி எம்.பி. தலை­மை­யில், 11 பேர் கொண்ட குழு அமைக்­கப்­பட்­டுள்­ளது.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறி­வு­ரைப்­படி, இந்த தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு, பிப்ரவரி 5 ஆம் தேதி முதல் தமிழ்­நாட்­டின் முக்­கிய நக­ரங்­க­ளுக்கு சுற்­றுப்­ப­ய­ணம் மேற்கொண்டு வருகிறது. "உரி­மை­களை மீட்க ஸ்டாலி­னின் குரல் - நாடா­ளு­மன்­றத்­தில் ஒலித்­திட வேண்­டிய தமிழ்­நாட்­டின் கருத்­துகள்" என்ற தலைப்­பில், பல்வேறு தரப்பினரின் கருத்துகளை கேட்டு வருகிறது. எழுத்துப்பூர்வமாக, தொலைபேசி வாயிலாக, சமூக ஊடகங்கள் வழியாக, ஆன்லைன் மூலமாக கோரிக்கைகளை பெறப்படுகின்றன.

திருப்பூரில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்ற கூட்டத்தில், திருப்பூர்வடக்கு, திருப்பூர் தெற்கு, ஈரோடு, கரூர் மாவட்டங்களைச் சேர்ந்த தொழில் துறையினர், கல்வியாளர்கள், தொழில் முனைவோர்கள், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், மாணவர் சங்கங்கள், சூழலியலாளர்கள், மருத்துவர்கள், தொண்டு நிறுவனங்கள், அரசு மற்றும் தனியார் துறை ஊழியர்கள், திமுக நிர்வாகிகள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரும், தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவினரிடம் தங்கள் கோரிக்கைகளை அளித்தனர் முன்னதாக கோரிக்கைகள் பெறுவதற்கு முன் உரையாற்றிய கனிமொழி எம்பி திமுக சார்பில், நாடாளுமன்ற தேர்தல் அறிக்கை தயாரிக்க இந்த குழு உருவாக்கப்பட்டு தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் சென்று அங்குள்ள மக்களின், தொழில் துறையினரின் கருத்துகளை கேட்டு அறிக்கை தயார் செய்ய எங்களை முதல்வர் நியமித்துள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் துவங்கி தற்போது வரை பல்வேறு மாவட்டங்களுக்கு சென்று, அனைத்து மக்கள் மற்றும் தொழில் துறையினர், சமூக சேகவர்களின் கருத்துகளை கேட்டு வருகிறோம். இன்று திருப்பூரில் உங்களை சந்தித்தது எங்களுக்கு மகிழ்ச்சி. திமுக மக்களின் கருத்துகளை கேட்டறிந்து ஆட்சி செய்து, உங்களுடைய குரலாக உள்ளது. தமிழக முதல்வர் ஆட்சி பொறுப்பேற்ற போது கூறியது போல், வாக்களித்தவர்களுக்கு மட்டுமல்லாமல் வாக்களிக்காதவர்களுக்குமான ஆட்சியாக இந்த ஆட்சி இருக்கும் என்பது போல் திராவிடம் மாடல் அரசு செயல்பட்டு வருகிறது. இந்த அடிப்படையில் தான் மீண்டும் உங்களை தேடி வந்துள்ளோம். தொழில் நகரமான திருப்பூர் ஒன்றிய அரசின் ஜி.எஸ்.டி யால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் ஒவ்வொரு நாளும் மதம், மொழி பெயரால் நம்மை பிரித்து காயப்படுத்தி வருகிறார்கள். இந்த நாடு அனைவருக்குமான நாடு. இதன் அடிப்படை யாரும் அழிக்க கூடாது என நம் திராவிட அரசு போராடி வருகிறது. நம் பிள்ளைகளுக்கான பாதுகாப்பை நம் தான் உருவாக்க முடியும். வரும் தேர்தல் வெறும் ஆட்சி காண தேர்தலாக இல்லாமல் நாட்டை பாதுகாப்பதற்கான தேர்தலாக இருக்க வேண்டும் என்றார்.

Tags

Next Story