மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதி தேர்தல் அலுவலர் அறிக்கை வெளியீடு

மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதி தேர்தல் அலுவலர் அறிக்கை வெளியீடு

தேர்தல் அதிகாரி

மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதி தேர்தல் அலுவலர் .ஏ.பி.மகாபாரதி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

மயிலாடுதுறை மாவட்டம் பத்திரிக்கைச் செய்தி இந்திய தேர்தல் ஆணையம் பாராளுமன்ற பொதுத்தேர்தலுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதிக்கான தேர்தல் எதிர்வரும் 19.4.2024 ஆகும்.

வாக்கு எண்ணிக்கை நாள் - 4.6.2024 ஆகும். வேட்பு மனுதாக்கல் செய்ய கடைசி நாள் - 27.03.2024, வேட்பு மனுபரிசீலனை நாள் - 28.03.2024, வேட்பு மனு திரும்ப பெற கடைசி நாள் - 30.03.2024 ஆகும். மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதியில் மயிலாடுதுறை மாவட்டத்தில் அடங்கியுள்ள 160-சீர்காழி (தனி) , 161 -

மயிலாடுதுறை , 162- பூம்புகார் மற்றும் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள 170- திருவிடைமருதூர் (தனி), 171 - கும்பகோணம் மற்றும் 172-பாபநாசம் ஆகிய ஆறு சட்டமன்ற தொகுதிகள் அடங்கி உள்ளது. மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதியில் சீர்காழி சட்டமன்ற தொகுதியில் 122065 ஆண் வாக்காளர்களும், 124637 பெண் வாக்காளர்களும்,

10 மூன்றாம் பாலினத்தவர்களும், மயிலாடுதுறை சட்டமன்ற தொகுதியில் 116166 ஆண் வாக்காளர்களும், 118247 பெண் வாக்காளர்களும், 10 மூன்றாம் பாலினத்தவர்களும், பூம்புகார் சட்டமன்ற தொகுதியில் 132812 ஆண் வாக்காளர்களும், 136755 பெண் வாக்காளர்களும், 3 மூன்றாம் பாலினத்தவர்களும், திருவிடைமருதூர் சட்டமன்ற தொகுதியில் 129218 ஆண் வாக்காளர்களும், 132358 பெண் வாக்காளர்களும் , 12 மூன்றாம் பாலினத்தவர்களும்,

கும்பகோணம் சட்டமன்ற தொகுதியில் 129737 ஆண் வாக்காளர்களும், 136736 பெண் வாக்காளர்களும் , 14 மூன்றாம் பாலினத்தவர்களும், பாபநாசம் சட்டமன்ற தொகுதியில் 168267 ஆண் வாக்காளர்களும், 132703 பெண் வாக்காளர்களும், 20 மூன்றாம் பாலினத்தவர்களும் ஆக மொத்தம் 15,38,351 வாக்காளர்கள் உள்ளனர். மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதியில் சீர்காழி சட்டமன்ற தொகுதியில் 288 வாக்குசாவடிகளும், மயிலாடுதுறை சட்டமன்ற தொகுதியில் 266 வாக்குசாவடிகளும், பூம்புகார் சட்டமன்ற தொகுதியில் 306 வாக்குசாவடிகளும்,

திருவிடைமருதூர் சட்டமன்ற தொகுதியில் 293 வாக்குசாவடிகளும், கும்பகோணம் சட்டமன்ற தொகுதியில் 289 வாக்குசாவடிகளும், பாபநாசம் சட்டமன்ற தொகுதியில் 301 வாக்குசாவடிகளும் ஆக மொத்தம் 1743 வாக்குசாவடிகள் உள்ளன. மயிலாடுதுறை மாவட்டத்தில் 50 பதற்றமான வாக்குசாவடிகளும், தஞ்சாவூர் மாவட்டத்தில் 39 பதற்றமான வாக்குசாவடிகளும் என மொத்தம் 89 வாக்குசாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளது.

இவ்வாக்குசாவடிகளுக்கு கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது. மேலும் இந்த வாக்குசாவடிகளுக்கு நுண்பார்வையாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர். வாக்குசாவடிகளில் வெப்கேமரா பொருத்தப்பட்டு வாக்குப்பதிவு நடவடிக்கைகள் கண்காணிக்கப்படும். மயிலாடுதுறை மாவட்டத்தில் தேர்தலை எதிர்கொள்ள ஏதுவாக வாக்குப்பதிவு அலுவலர்கள் 5000 ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் பணியில் ஈடுப்படுத்தப்பட உள்ளனர்.

சட்டம் ஒழுங்கு பணிகளை மேற்கொள்ள ஏதுவாக மாவட்டத்தில் 85 மண்டல அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தஞ்சாவூர் மாவட்டம திருவிடைமருதூர்,பாபநாசம்,கும்பகோணம், ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் தேர்தலை எதிர்கொள்ள ஏதுவாக வாக்குப்பதிவு அலுவலர்கள் 5000 ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் பணியில் ஈடுப்படுத்தப்பட உள்ளனர்.

சட்டம் ஒழுங்கு பணிகளை மேற்கொள்ள ஏதுவாக மாவட்டத்தில் 75 மண்டல அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். சுதந்திரமான நியாயமான தேர்தல்கள் நடைபெறுவதை உறுதிசெய்யும் வகையில் தேர்தல் விதிமீறல்கள் தொடர்பான புகார்கள் மீது நடவடிக்கை எடுக்க சட்டமன்ற தொகுதிகளுக்கு 3 குழுக்கள் வீதம் 9 பறக்கும்படை மற்றும் நிலையான கண்காணிப்பு குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இக்குழுக்கள் வாக்காளர்களுக்கு பணம் அளித்தல், இலவசங்கள் வழங்குதல், மதுபானங்கள் அளித்தல் , சட்டத்திற்கு புறம்பாக மது, போதை பொருட்களை கொண்டு வருதல் உள்ளிட்ட நடவடிக்கைகளை கண்காணித்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ரூ.50 ஆயிரம் அல்லது அதற்கு மேற்பட்ட ரொக்கம் உரிய ஆவணங்களின்றி

எடுத்துச் செல்லப்பட்டால் பறிமுதல் செய்யப்படும். அதேபோன்று ரூ.10 ஆயிரத்திற்கு மேற்பட்ட பரிசுபொருட்கள் எடுத்துச்செல்ல கூடாது. வங்கிபரிவத்தனைகள், ஆன்லைன் பரிவர்த்தனைகள் உள்ளிட்டவையும் கண்காணிக்கப்படும். மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் இயங்கும் தேர்தல் கட்டுப்பாட்டு அறை, ஊடக கண்காணிப்பு மையம் செயல்பட்டு வருகிறது. தேர்தல் கட்டுப்பாட்டு அறையை பொருத்த வரையை 24 மணி நேரமும் சுழற்சி முறையில் அலுவலர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தேர்தல் நடத்தை விதிகள் தொடர்பான புகார்களை 1800 425 8970 என்ற கட்டணமில்லா தொலைபேசியிலும், 04364 -211722 என்ற தொலைபேசி எண்ணிலும், திருவிடைமருதூர் சட்டமன்ற தொகுதிக்கு 0435-240187 என்ற எண்ணிலும், கும்பகோணம் சட்டமன்ற தொகுதிக்கு 0435-2430101 என்ற எண்ணிலும், பாபநாசம் சட்டமன்ற தொகுதிக்கு 0437-4222456 என்ற எண்ணிலும்,தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். பெறப்படும் புகார்கள் அனைத்தும் 24 மணி நேரத்திற்குள் தீர்வு மேற்கொள்ளப்படும்.

வாக்காளர் பட்டியிலில் பெயர் சேர்த்தல், திருத்தம், நீக்கம் தொடர்பான விவரங்களை பெற மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் இயங்கும் வாக்காளர் தொடர்பு மையம் செயல்பட்டு வருகிறது. பொதுமக்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தல் தொடர்பான விபரங்களை 1950 என்ற கட்டணிமில்லா தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொண்டு தேவையான விபரங்களை பெற்றுக்கொள்ளலாம்.

மயிலாடுதுறை பாராளுமன்ற தேர்தல் அறிவிப்பினை தொடர்ந்து, தேர்தல் நடத்தை விதிகளை மீறியோர்கள் மீது தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன்படி, இதுவரை 3704 சுவர் விளம்பரங்களும், 6864 சுவரொட்டிகளும், 1174 பதாகைகளும், 751 இதர விளம்பரங்களும் அகற்றப்பட்டு, 71 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், நிலையான கண்காணிப்பு குழுவின் வாகன சோதனைகளில் உரிய ஆவணமின்றி எடுத்து வரப்பட்டதாக இதுவரை ரூ. 14,32இ200 பறிமுதல் செய்யப்பட்டு கருவூலக் கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது.

எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் 100 சதவீத வாக்குப்பதிவினை வலியுறுத்தி ஊராட்சி அளவில் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் மூலம் விழிப்புணர்வு பேரணி, உறுதிமொழி போன்ற நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது என மாவட்ட ஆட்சியர்ஃ மாவட்ட தேர்தல் அலுவலர் திரு.ஏ.பி.மகாபாரதி இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story