சூடுபிடிக்கும் தேர்தல்: திருச்சியில் வைகோவின் மகன் துரை வைகோ போட்டி..?

சூடுபிடிக்கும் தேர்தல்: திருச்சியில் வைகோவின் மகன் துரை வைகோ போட்டி..?

திருச்சியில் துரை வைகோ போட்டி

திமுக கூட்டணியில் உள்ள மதிமுக சார்பில் துரை வைகோ வேட்பாளராக போட்டியிடுகிறார்.

திமுக கூட்டணியில் திருச்சியில் மதிமுக சார்பில் வைகோ மகன் துரை வைகோ போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் மதிமுக இணைந்துள்ளது. கூட்டணி பேச்சுவார்த்தையில் மதிமுகவுக்கு ஒரு தொகுதியை திமுக ஒதுக்கியது. அதன்படி திருச்சி தொகுதியை பெற்றுள்ள வைகோ மதிமுகவின் வேட்பாளரை அறிவித்துள்ளார். அதன்படி திருச்சி தொகுதியில் துரை வைகோ போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த முடிவு மதிமுகவின் ஆட்சி மன்ற குழுவில் ஒருமனதாக பேசி ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, திருச்சி தொகுதியில் மதிமுக சார்பில் துரை வைகோ போட்டியிடுவார் என்றும், பம்பம் சின்னம் கேட்டு தேர்தல் ஆணையத்திடம் முறையிட்டுள்ளதாகவும் தெரிவித்தார். கடந்த தேர்தலில் திருச்சி தொகுதி காங்கிரஸ்க்கு ஒதுக்கப்பட்ட நிலையில், தற்போது மதிமுகவுக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

இதேபோல் திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர்களின் பெயர்களும் அறிவிக்கப்பட்டுள்ளன. அந்த வகையில், திருப்பூர் நாடாளுமன்றத் தொகுதியில் கே. சுப்பராயன், நாகை தொகுதியில் செல்வராஜ் ஆகியோர் போட்டியிடுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக கூட்டயில் இருக்கும் காங்கிரஸ் போட்டியிடும் 10 தொகுதிகளின் பெயர்களை திமுக அறிவித்தது. அதன்படி, திருவள்ளூர்(தனி), கடலூர், மயிலாடுதுறை, நெல்லை, கிருஷ்ணகிரி, கருர், மயிலாடுதுறை, நெல்லை, விருதுநகர், கன்னியாகுமரி மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட தொகுதிகளில் காங்கிரஸ் களமிறங்கி போட்டியிடுகிறது.

Tags

Next Story