பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலம் தமிழகம்: அமைச்சர் ரகுபதி
Minister Raghupathi
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக அமைச்சர் ரகுபதி பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், கைது செய்யப்பட்ட ஞானசேகரன் தி.மு.க.வில் அடிப்படை உறுப்பினர் கூட கிடையாது. வழக்கை மறைப்பதற்கான அவசியம் தி.மு.க. அரசுக்கோ, முதலமைச்சருக்கோ இல்லை. பாலியல் வன்கொடுமை வழக்கில் காவல்துறை உரிய நடவடிக்கை எடுத்துள்ளது. கட்சிக்காரர்களே தவறு செய்தாலும் உடனடியாக நடவடிக்கை எடுத்து வருகிறோம். தி.மு.க. தலைவர்கள் வெளியில் செல்லும்போது யார் அருகில் வந்து புகைப்படம் எடுக்கிறார்கள் என கண்காணிக்க முடியாது. ஒரு கூட்டம், விழா நடக்கிறது என்றால் அமைச்சர்களுக்கு அருகில் வந்து பலர் புகைப்படம் எடுப்பது சகஜம்தான். ஞானசேகரன் சைதாப்பேட்டையை சேர்ந்தவர் என்பதால் அமைச்சர் மா.சுப்பிரமணியத்துடன் போட்டோ எடுத்திருக்கலாம். தமிழ்நாட்டில் பெண்கள் துணிச்சலாக வந்து கல்வி கற்பதை தடுக்க எதிர்க்கட்சிகள் சதி செய்கின்றனர். மாணவி வன்கொடுமை செய்யப்பட்டதை அரசியலாக்கி பெண்கள் வெளியில் வந்து உயர்கல்வி பயில்வதை தடுக்க பார்க்கிறார்கள். பெண்கள் அதிகம் கல்வியறிவு பெறும் மாநிலமாக தமிழ்நாடு உள்ளது. பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் பாலியல் வழக்குகளில் சிக்கிய பா.ஜ.க.வினருக்கு அக்கட்சியினர் ஆதரவு பேரணி நடத்துகின்றனர். நன்னடத்தை காரணத்தை கூறி பா.ஜ.க.வை சேர்ந்த பாலியல் குற்றவாளிகள் விடுவிக்கப்பட்டனர். தி.மு.க. பொறுப்பேற்ற பின் அனைத்து உட்கோட்டங்களிலும் மகளிர் காவல் நிலையங்கள் திறந்து வருகிறார் முதலமைச்சர். அ.தி.மு.க. ஆட்சியில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்ததால் தி.மு.க. ஆட்சியில் கூடுதலாக மகளில் காவல் நிலையங்கள் திறக்கப்பட்டன. பெண்கள் வாழ்வதற்காக பாதுகாப்பான மாநிலத்தில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது என்று கூறினார்.