மு.க.ஸ்டாலின் பச்சை பொய் சொல்கிறார் - எடப்பாடி பழனிசாமி

மு.க.ஸ்டாலின் பச்சை பொய் சொல்கிறார் - எடப்பாடி பழனிசாமி

கொடியேற்றம் 

திமுக தலைவர் ஸ்டாலின் தேர்தல் நேரத்தில் அறிவித்த 520 அறிவிப்புகளில் ஒரு சிலதை மட்டும் நிறைவேற்றிவிட்டு 100% நிறைவேற்றி விட்டதாக பச்சை பொய் கூறுகிறார். ஆட்சிக்கு வந்த பின்னர் வாக்களித்த மக்களை மறந்தது திமுக. திமுக இளைஞரணி மாநாடு ரெக்கார்டு டான்ஸ்க்காகவே இரண்டுமுறை தள்ளிவைத்து நடத்தப்படுகிறது. மதுரையில் அதிமுக நடத்திய எழுச்சி மாநாடு, மக்களுக்கு என்ன செய்வோம் என்று எடுத்துக்காட்டிய மாநாடு. என அதிமுக பொதுசெயலாளர் - எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

சேலம் மாவட்டம், மேச்சேரி அருகே கழக நிர்வாகியின் இல்ல திருமண விழாவில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்பதற்காக வருகை தந்தார். அப்போது வழியில் செலக்கல் திட்டு மற்றும் மல்லிகுந்தம் ஆகிய இரண்டு இடங்களில் கழக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி கழக கொடியை ஏற்றி வைத்தார். செலக்கல் திட்டு பகுதியில் கழக கொடியை ஏற்றிவைத்து, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி சிறப்புரையாற்றினார்.

செலக்கல் திட்டு பகுதியில் அவர் பேசியது: திமுக தலைவர் ஸ்டாலின் தேர்தல் நேரத்தில் அறிவித்த 520 அறிவிப்புகளில் ஒரு சிலதை மட்டும் நிறைவேற்றிவிட்டு 100% நிறைவேற்றி விட்டதாக பச்சை பொய் கூறுகிறார். ஆட்சிக்கு வந்த பின்னர் வாக்களித்த மக்களை மறந்தது திமுக. திமுக இளைஞரணி மாநாடு ரெக்கார்டு டான்ஸ்க்காகவே இரண்டுமுறை தள்ளிவைத்து நடத்தப்படுகிறது. மதுரையில் அதிமுக நடத்திய எழுச்சி மாநாடு, மக்களுக்கு என்ன செய்வோம் என்று எடுத்துக்காட்டிய மாநாடு.

அதிமுக நடத்திய மாநாடு மக்களுக்கு எந்த ஒரு இடையூறும் இல்லாமல் நடத்திக் காட்டினோம். அதிமுக ஆட்சியில் இருந்த காரணத்தினால் தான் தமிழகம் இந்திய அளவில் உயர்ந்து நிற்கிறது. மேச்சேரி அருகே மல்லிகுந்தம் பகுதியில் கழக கொடியை ஏற்றிவைத்து, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி சிறப்புரை. இரண்டுமுறை தேதி குறித்து திமுக இளைஞரணி மாநாடு நடத்த முடியாமல் மூன்றாவது முறையாக நடத்துகின்றனர்.

அதற்கு காரணம் சேலம் மாவட்டம் அதிமுகவின் கோட்டை. அதில் யாரும் நுழைய முடியாது. அப்படி நுழைய முயன்றால் மக்கள் விரட்டியடிப்பார்கள். எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோருக்கு மக்கள்தான் வாரிசு. இருபெரும் தலைவர்கள் தங்கள் வாழ்நாள் முழுவமும் மக்களுக்காகவே உழைத்தனர். அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டம் என்பதால், இரண்டு ஆண்டு, 8 மாதம் ஆகிய நிலையில் மேட்டூர் உபரிநீரை கொண்டு 100 ஏரி நிரப்பும் திட்டத்தை திமுக கிடப்பில் போட்டுள்ளனர். அது ஆமை வேகத்தில் நடக்கிறது. விடியா திமுக அரசுக்கு வரும் நாடாளுமன்ற தேர்தலி சரியான பதிலடி கொடுக்க வேண்டும் என்றார். நிகழ்ச்சியில் கழக அமைப்புச் செயலாளர் செம்மலை, மாநிலங்களவை உறுப்பினர் சந்திரசேகரன், மேச்சேரி மேற்கு ஒன்றிய கழக செயலாளர் செல்வம், ஒன்றிய அம்மா பேரவை செயலாளர் ராஜா உட்பட கழக நிர்வாகிகள் பலரும் உடன் இருந்தனர்.

Tags

Next Story