ராகுல் காந்தி தான் பிரதமர் வேட்பாளர் - எம்.பி மாணிக்கம் தாகூர்

ராகுல் காந்தி தான் பிரதமர் வேட்பாளர் - எம்.பி மாணிக்கம் தாகூர்
மாணிக்கம் தாகூர் எம்.பி 
காங்கிரஸ் கட்சியை பொருத்தமட்டில் பிரதமர் வேட்பாளர் ராகுல் காந்தி மட்டும் தான், அவரை முன்னிறுத்தி தான் நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி பிரச்சாரம் மேற்கொள்ளும் என விருதுநகர் எம்.பி மாணிக்கம் தாகூர் தெரிவித்தார்.

விருதுநகரில் கடந்த 19ம் தேதி முதல் பல்வேறு பகுதிகளில் மக்களுடன் முதல்வர் முகாம் நடைபெற்று வருகிறது. இந்த முகாமில் ஏராளமான பொதுமக்கள் மனு அளித்து வருகின்றனர் இந்த நிலையில் விருது நகரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற மக்களுடன் முதல்வர் முகாமை விருதுநகர் நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் மாணிக்கம் தாகூர் நேரில் சென்று பார்வையிட்டு மனு தாக்கல் செய்ய வந்த பொது மக்களிடம் முகாம் குறித்து கேட்டறிந்தார்.மேலும் இந்த நிகழ்ச்சியில் விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் சீனிவாசன் மற்றும் விருதுநகர் நகர்மன்ற தலைவர் மற்றும் காங்கிரஸ் கட்சியின் பிரதிநிதிகள் என பலர் கலந்து கொண்டனர்

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர், க்களின் பிரச்சனைகளை பார்க்க வேண்டியது முதல்வர் மோடியின் கடமை. அடிக்கல் நாட்டுவது மற்றும் திறந்து வைப்பது மட்டுமே ஒரு வேலை கிடையாது என்றார். பாதிக்கப்பட்ட மக்களை சந்திப்பது என்பது முதல்வரின் வேலை மட்டும் கிடையாது எனவும், நாட்டின் பிரதமராக இருக்கும் மோடியும் கன மழையால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி மக்களை நேரில் வந்து பார்க்க வேண்டும் எனவும் விமானம் மூலம் ஆய்வு செய்யாமல் மக்களிடம் நேரிடையாக சென்று பார்க்க வேண்டும் என மாணிக்கம் தாகூர் எம்.பி கேட்டு கொண்டார்.

மேலும் பேசிய மாணிக்கம் தாகூர் வருகிற ஜனவரி 2ம் தேதி பிரதமர் மோடியால் திறக்கப்பட உள்ள திருச்சி விமான நிலையம் அடுத்த ஆண்டு தனியாரிடம் ஒப்படைக்கப்பட உள்ளது எனவும் முதல் தனியார் விமான நிலையம் என்பது திருச்சி விமான நிலையமாக இருக்கப் போகிறது என குற்றம் சாட்டினார் தனியார் மயமாக்கலை நிறுத்த வேண்டும் என்றால் வருகிற 2024 பாராளுமன்ற தேர்தலில் மோடிக்கு விடை கொடுக்க வேண்டும் என மாணிக்கம் தகவல் தெரிவித்தார் மேலும் பேசிய மாணிக்கம் தாகூர் தனக்கு வாக்களித்த தூத்துக்குடி மக்கள் மீது ஆளுநர் தமிழிசைக்கு உண்மையாகவே நன்றி விசுவாசம் இருந்திருந்தால் முதல் நாளே வருவதற்கு என்ன பிரச்சனை என கேள்வி எழுப்பிய மாணிக்கம் தாகூர் தமிழக அரசு செய்திருக்கின்ற பணியை தரம் தாழ்த்தி பேசுவது என்பது மேதகு ஆளுநர் பதவியில் இருப்பவர் களுக்கு சரியாக இருக்காது என்றார். மேலும் பேசிய மாணிக்கம் தாகூர் வாக்கு மற்றும் விளம்பரத்தை மட்டுமே நம்பி இருப்பது பாஜக தான் என விமர்சனம் செய்தார்.

மேலும் பேசிய மாணிக்கம் தாகூர் வாயிலே வடை சுடுவதற்கு மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு நோபல் பரிசு கொடுக்க வேண்டும் என்றார். மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை பொருத்தமட்டில் மீண்டும் வந்து வேண்டாத அரசியலை பேச போகிறார் என்றார் மேலும் பேசிய மாணிக்கம் தாகூர் உண்மையிலேயே மத்திய நிதி அமைச்சர் பொறுப்பில் இருப்பவர் போல் பேசுவார் என்றால் கனமழையால் பாதிக்கப்பட்ட சிறு குறு தொழில் செய்பவர்களுக்கு முழுமையாக வட்டியில்லா கடன் வழங்க மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பாரா கேள்வி எழுப்பினார்.

அதே போல் கன மழையால் வீடுகளில் இருந்த பொருட்கள் சேதம் அடைந்ததற்கு வட்டியில்லா கடன் மத்திய அரசு வழங்க வேண்டும் என்றார். மேலும் பேசிய மாணிக்கம் தாகூர் கன மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழக அரசு அறிவித்த நிவாரணம் போதுமானதாக இல்லை எனவும் அவர்களின் இழப்பு என்பது மிகப்பெரிய இழப்பு என்றார் மேலும் தமிழக அரசின் நிதி நிலைமையை பொருத்தமட்டிலே உடனடி நிவாரணமாக என்ன அறிவித்திருக்கிறதோ தமிழக அரசு அதை செய்திருக்கிறது என்றார்.

மத்திய அரசு தான் முழுமையாக கொடுக்க வேண்டும் எனவும் மத்திய அரசின் பணி தான் என்றார் மத்திய அரசு நிதி கொடுக்காமல் தமிழக மக்களை வஞ்சிப்பதை நிறுத்திக் கொள்ள வேண்டும் எனவும் கனமழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மத்திய அரசு முழுமையாக ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்றார்

மேலும் பேசிய மாணிக்கம் தாகூர் டெல்லியில் நடைபெற்ற இந்தியா கூட்டணியில் பேசப்பட்ட சில விஷயங்கள் வெளியே வந்திருப்பதாகவும் அந்த அந்த கூட்டத்தில் தேர்தலுக்கு பின்னரே பிரதமர் வேட்பாளரை தேர்வு செய்யப்படும் என முடிவு செய்யப்பட்டதாக தெரிவித்தார். மேலும் காங்கிரஸ் கட்சியை பொருத்தமட்டில் பிரதமர் வேட்பாளர் என்பது ராகுல் காந்தி மட்டும் தான் எனவும் ராகுல் காந்தியை முன்னிறுத்தி தான் நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி பிரச்சாரம் மேற்கொள்ளும் என்றார். இந்தியா கூட்டணியில் பிரதமர் வேட்பாளர் என்பவர் அனைவரும் உட்கார்ந்து பேசி முடிவெடுக்கப்பட வேண்டிய விஷயம் என்றார்.

Tags

Next Story