பொன்முடி மீது சேறு வீச்சு; திமுகவுக்கு என்ன நடக்கப்போகிறது என்பதற்கான சான்று: அண்ணாமலை

பொன்முடி மீது சேறு வீச்சு; திமுகவுக்கு என்ன நடக்கப்போகிறது என்பதற்கான சான்று: அண்ணாமலை

அண்ணாமலை

பொன்முடி மீது சேறு வீச்சு சம்பவம் திமுகவுக்கு என்ன நடக்கப்போகிறது என்பதற்கான சான்று என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

ஃபெஞ்சல் புயலால் விழுப்புரம் உள்ளிட்ட வட தமிழக மாவட்டங்கள் கடும் பாதிப்புகளைச் சந்தித்தன. எனவே ஆளும் கட்சி மற்றும் அதிமுக, பாமக, பாஜக உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குச் சென்று ஆய்வுசெய்து, ஆறுதல் கூறியும், நிவாரணங்கள் அளித்தும் வருகின்றனர். இதற்கிடையே, விழுப்புரம் மாவட்டத்தின் இருவேல்பட்டு பகுதிக்கு சென்ற வனத்துறை அமைச்சர் பொன்முடி மற்றும் திமுக நிர்வாகிகள் மீது சேற்றை வாரி இறைத்து, சாலை மறியலில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை எக்ஸ் வலைதள செய்தியில், இதுதான் தமிழகத்தின் தற்போதைய நிலை. முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் சென்னையின் தெருக்களில் புகைப்படம் எடுப்பதில் மும்முரமாக இருந்தனர். அதேநேரம், சென்னை மாநகரில் மிகக் குறைந்த மழையே பெய்தது. சென்னையைத் தாண்டி நடக்கும் நிகழ்வுகளைக் கண்காணிக்கத் தேவையில்லை என அவர்கள் எண்ணிவிட்டனர். திமுகவின் ஊடகப் பிரிவாக டிஐபிஆர் (TN DIPR) நடந்துகொள்வதுடன், வெள்ளத்தின் உண்மைகளிலிருந்து மக்களைத் திசைதிருப்ப கோபாலபுரம் வாரிசுகளை விளம்பரப்படுத்துவதில் அது மும்முரமாக உள்ளது. இன்று வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் சென்று பார்வையிட்ட ஊழல் திமுக அமைச்சர் பொன்முடியால், பொதுமக்களின் விரக்தி உச்சநிலையை எட்டியது. திமுகவுக்கு என்ன நடக்கப்போகிறது என்பதற்கு இது ஒரு நினைவூட்டல் என பதிவிட்டுள்ளார்.

Tags

Next Story