நாமக்கல் கிழக்கு, மேற்கு, தெற்கு நகர திமுக செயற்குழுக் கூட்டம்

நாமக்கல் கிழக்கு, மேற்கு, தெற்கு நகர திமுக செயற்குழுக் கூட்டம்

இன்று நாமக்கல் கிழக்கு, மேற்கு, தெற்கு நகர திமுக செயற்குழுக் கூட்டம்

இன்று நாமக்கல் கிழக்கு, மேற்கு, தெற்கு நகர திமுக செயற்குழுக் கூட்டம்

நாமக்கல் கிழக்கு, மேற்கு, தெற்கு நகர கழகம் சார்பாக கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனா். அதில் நாமக்கல் கிழக்கு மாவட்டம் நாமக்கல் கிழக்கு, மேற்கு, தெற்கு நகர திமுக செயற்குழு கூட்டம் இன்று (24-12-2023) ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணிக்கு நாமக்கல் மோகனூர் சாலை, முல்லை நகரில் உள்ள நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக அலுவலகமான கலைஞர் அறிவாலயத்தில், இனமானப் பேராசிரியர் அரங்கில் நடைபெற உள்ளது.

கூட்டத்தில் நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் தலைமை தாங்குகிறார். வனத்துறை அமைச்சர் டாக்டர் மா.மதிவேந்தன், நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் பெ.ராமலிங்கம், நகர திமுக செயலாளர்கள் பூபதி, சிவக்குமார், ராணா ஆனந்த், நகர் மன்ற தலைவர் து.கலாநிதி, மாவட்ட அவைத்தலைவா் சி.மணிமாறன் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். இக்கூட்டத்தில் நகர திமுக நிர்வாகிகள், வார்டு செயலாளர்கள், பிரதிநிதிகள், நகர் மன்ற உறுப்பினர்கள், மாவட்ட, நகர, சார்பு அணி நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளனர்.

Tags

Next Story