பாஜக தோற்பது நரேந்திர மோடிக்கு தெரியும் - செல்வப்பெருந்தகை

பாஜக தோற்பது நரேந்திர மோடிக்கு தெரியும் - செல்வப்பெருந்தகை

செய்தியாளர் சந்திப்பு 

நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதா படுதோல்வி அடையப்போகிறது என்பது நரேந்திரமோடிக்கு தெரியும். தேர்தல் ஆணையம் நடுநிலையாக செயல்படவில்லை. பிரதமர் நரேந்திரமோடி பற்றி புகார் தெரிவித்தால், பா.ஜனதா கட்சி தலைவருக்கு தேர்தல் ஆணையம் நோட்டீசு அனுப்புகிறது. தேர்தல் ஆணையம் பிரதமர் நரேந்திரமோடியின் கைப்பாவையாக இருக்க கூடாது என செல்வப்பெருந்தகை தெரிவித்தார்.

சேலம் மாவட்ட காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று சேலத்தில் உள்ள ஒரு மண்டபத்தில் நடைபெற்றது. இதற்கு சேலம் மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் ஏ.ஆர்.பி. பாஸ்கர் வரவேற்று பேசினார். முன்னாள் மத்திய மந்திரி கே.வி.தங்கபாலு, தமிழக சட்டசபை காங்கிரஸ் கட்சி தலைவர் ராஜேஷ்குமார் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். கட்சியின் மாநில தலைவர் கு.செல்வப்பெருந்தகை கலந்து கொண்டு பேசினார்.

முன்னதாக அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- காங்கிரஸ் கட்டமைப்பை வலிமைப்படுத்தவும், செயல்படாத நிர்வாகிகளுக்கு அறிவுரை வழங்கவும் கலந்தாய்வு கூட்டம் நடக்கிறது. பிரதமர் நரேந்திரமோடி திடீரென மிகப்பெரிய பல்டி அடித்து உள்ளார். பில்கின்ஸ் பானு கொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்டவர்களை, மீண்டும் சிறையில் அடைக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது பிரதமர் நரேந்திரமோடிக்கு தெரியுமா?, தெரியாதா?, கோத்ரா சபர்பதி ரெயில் நிலையத்தில் முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்ட போது குஜராத்தில் முதல்-மந்திரியாக இருந்தது யார்? இது பிரதமர் நரேந்திரமோடிக்கு தெரியாதா?

நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதா படுதோல்வி அடையப்போகிறது என்பது நரேந்திரமோடிக்கு தெரியும். மக்களை ஏமாற்ற தற்போது பிரிவினை வாத அரசியல் பேசவில்லை என்று கூறுகிறார். நாடாளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணி 400 இடங்களில் வெற்றி பெறும். தேர்தல் ஆணையம் நடுநிலையாக செயல்படவில்லை. பிரதமர் நரேந்திரமோடி பற்றி புகார் தெரிவித்தால், பா.ஜனதா கட்சி தலைவருக்கு தேர்தல் ஆணையம் நோட்டீசு அனுப்புகிறது. தேர்தல் ஆணையம் பிரதமர் நரேந்திரமோடியின் கைப்பாவையாக இருக்க கூடாது.

போதைப்பொருட்கள் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. குறிப்பாக ஆப்கானிஸ்தானில் இருந்து குஜராத் மாநிலத்தில் உள்ள 2 துறைமுகங்கள் வழியாக கடத்தப்படுகிறது. இந்த 2 துறைமுகங்களும் அதானிக்கு சொந்தமானது. கொரோனா காலத்தில் கடத்தப்பட்ட போதைப்பொருட்கள் பறிமுதல் செய்து டெல்லியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டது. ஆனால் தற்போது அவை காணாமல் போய் இருக்கிறது. அந்த போதைப்பொருட்களை கடத்தியவர்கள் யார்? எனவே பா.ஜனதா கட்சி மூலம் தான் தமிழ்நாட்டிற்கு போதைப்பொருட்கள் வருகிறது. நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராக இருந்த ஜெயக்குமார் தனசிங் கொலை வழக்கை விசாரிக்க 10 போலீஸ் தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது. தமிழக போலீசார் மீது முழு நம்பிக்கை இருக்கிறது. உண்மை குற்றவாளிகள் விரைவில் கண்டுபிடித்து சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

Tags

Next Story