பழைய ஓய்வூதிய திட்டம் பரிசீலனையில் உள்ளது - நிதித்துறை அமைச்சர்

பழைய ஓய்வூதிய திட்டம் பரிசீலனையில் உள்ளது - நிதித்துறை அமைச்சர்

நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு

நிதி துறை மானியக் கோரிக்கையின் மீதான விவாதங்களின் போது பதிலளித்து பேசிய நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பழைய ஓய்வூதியத் திட்டம் பரிசீலனையில் உள்ளது என தெரிவித்தார்.
தமிழக சட்டசபை கூட்டத் தொடர் கடந்த 20ஆம் தேதி முதல் தொடங்கி நடந்து வருகிறது. காலை, மாலை என இரு வேளைகளாக மானியக் கோரிக்கை விவாதம் நடந்து வருகிறது. அந்த வகையில், நிதி மனித வள மேலாண்மை ஓய்வூதியங்களும் ஏனைய ஓய்வு கால நன்மைகள் துறைகளின் மானியக் கோரிக்கைகள் மீது விவாதங்கள் நடந்தது. அப்போது நிதித் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பேசுகையில், அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டம் தொடர்பான கொள்கை முடிவு பரிசீலனையில் உள்ளதாக தெரிவித்தார். மேலும் சாத்தியக் கூறுகளை ஆராய அமைத்த குழு மற்றும் பல்வேறு அமைப்புகளுடன் ஆலோசனை நடத்தி வருவதாகவும் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

Tags

Next Story