பிரதமர் மோடியை சந்திக்கும் ஓ.பி.எஸ். - வெளியான முக்கிய தகவல்
பைல் படம்
தமிழ்நாட்டில் அ.தி.மு.க.வுடனான கூட்டணி முறிந்து நான்கு மாதங்களுக்கு பிறகு பிரதமர் மோடி முதல் முறையாக இன்று தமிழகம் வருகிறார். பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள பிரதமர் மோடி நாளை காலை திருச்சி வருகிறார். காலை 10.30 மணிக்கு திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் 38-வது பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ளும் பிரதமர் மோடி அதன்பிறகு, மதியம் 12 மணிக்கு திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் ரூ. 1200 கோடி செலவில் சர்வதேச தரத்தில் கட்டப்பட்டு இருக்கும் பன்னாட்டு புதிய விமான முனையத்தை திறந்து வைக்கிறார்.
இதே நிகழ்ச்சியில் ரூ. 19 ஆயிரத்து 850 ரோடி மதிப்பிலான திட்டங்களையும் பிரதமர் மோடி துவங்கி வைக்கிறார். இந்த இரண்டு நிகழ்ச்சிகளிலும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மற்றும் ஆளுனர் ஆர்.என். ரவி ஆகியோர் கலந்து கொள்ள இருக்கின்றனர். இந்த நிலையில், திருச்சி வரும் பிரதமர் மோடியை முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் சந்திக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. பிரதமர் மோடி மற்றும் ஒ.பி.எஸ். இடையேயான சந்திப்பு திருச்சி விமான நிலையத்தில் நடைபெற இருப்பதாகவும் இதற்காக ஓ. பன்னீர்செல்வத்திற்கு நேரம் ஒதுக்கப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.