கூட்டணி கணக்குகளை 2026-ல் மக்களே மைனஸ் ஆக்கிவிடுவார்கள்: விஜய்

கூட்டணி கணக்குகளை 2026-ல் மக்களே மைனஸ் ஆக்கிவிடுவார்கள்: விஜய்
X

vijay

கூட்டணி கணக்குகள் அனைத்தும் 2026-ல் மக்களே மைனஸ் ஆக்கிவிடுவார்கள் என த.வெ.க. தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.

சென்னை நந்தம்பாக்கத்தில் நடைபெற்ற அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய த.வெ.க. தலைவர் விஜய், கூட்டணி கணக்குகளை 2026 ஆம் ஆண்டு மக்களே மைனஸ் ஆக்கிவிடுவார்கள் என்று தெரிவித்தார். இது குறித்து பேசிய அவர், மக்கள் உணர்வுகளை மதிக்க தெரியாத, மக்களுக்கு அடிப்படை சமூகநீதியான பாதுகாப்பை கூட உறுதி செய்ய இயலாத கூட்டணி கணக்குகளை மட்டுமே நம்பி இறுமாப்புடன் 200 வெல்வோம் என்று எகத்தாள முழக்கமிடும் மக்கள் விரோத ஆட்சியாளர்களுக்கு என் மக்களோடு இணைந்து நான் விடுக்கும் எச்சரிக்கை. நீங்க உங்கள் சுயநலத்திற்காக பல வழிகளில் பாதுகாத்து வரும் கூட்டணி கணக்குகள் அனைத்தும் 2026-ல் மக்களே மைனஸ் ஆக்கிவிடுவார்கள். கடைசியாக ஒரு விஷயம். விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் அவர்களால் இன்று வரமுடியாமல் ஆகிவிட்டது. அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவுக்கு கூட அவரால் கலந்துகொள்ள முடியாத அளவுக்கு அவருக்கு கூட்டணி கட்சிகள் சார்ந்து எவ்வளவு அழுத்தம் இருக்கும் என்று என்னால் யூகிக்க முடிந்தாலும், நான் இப்போ சொல்கிறேன். அவரின் மனம் முழுமையாக இன்று நம்மோடு தான் இருக்கும். இன்று மணிப்பூரில் என்ன நடக்கிறது என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால் அவை எதையும் கண்டுக் கொள்ளாமல் ஒரு அரசு மேலிருந்து நம்மை ஆட்சி செய்கிறது. அங்கு தான் அரசு அப்படி இருக்கிறது என்றால், இங்கு இருக்கும் அரசு எப்படி இருக்கிறது? இங்க நம் வேங்கைவயல் என்ற ஊரில் என்ன நடந்தது என்பது நம் எல்லோருக்கும் தெரியும். சமூகநீதி பேசும் இங்குள்ள அரசு அதற்கு எந்த விதமான நடவடிக்கையும் எடுத்ததாக தெரியவில்லை. இத்தனை வருடங்கள் கழித்தும் ஒரு துரும்பையும் கிள்ளி போடவில்லையே. இதையெல்லாம் இன்று அம்பேத்கர் அவர்கள் பார்த்தால் வெட்கப்பட்டு தலைகுனிந்து போவார். இன்று நடக்கும் பிரச்சினைகள், கொடுமைகளுக்கு குரல் கொடுக்க வேண்டும். ஆனால் நடக்கும் பிரச்சினைகள் ஒன்றா, இரண்டா? பெண் குழந்தைகளுக்கு எதிராக, பெண்களுக்கு எதிராக, ஏன் மனித உயிர்களுக்கு எதிராக. இதையெல்லாம் நாம் படிக்கிறோம், பார்த்து, மற்றவர்களிடம் இருந்து கேட்டு தெரிந்து கொள்கிறோம். இவை எல்லாவற்றுக்குமான தீர்வு என்ன தெரியுமா? நம் தமிழ்நாட்டு மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை பாதுகாப்புடன், முறையாக, முழுமையாக அளிக்கும், மக்களை உண்மையாகவே நேசிக்கும் ஒரு நல்ல அரசு. இது அமைந்தாலே போதும், இதைத் தான் மிகவும் எளிமை என்று கூறினேன். இங்கு தினந்தோரும் நடக்கும் பிரச்சினைகளுக்கு சம்பிரதாயத்திற்காக ட்வீட் போடுவதும், சம்பிரதாயத்திற்காக அறிக்கை விடுவதும், சம்பிரதாயத்திற்காக நானும் மக்களோடு மக்களாக இருக்கிறேன் என்று காட்டிக் கொள்வதும், சம்பிரதாயத்திற்காக மழை நீரில் நின்று புகைப்படம் எடுத்துக் கொள்வதும் என்று எனக்கு அதில் கொஞ்சமும் உடன்பாடு இல்லை. ஆனால், நாமும் சில சமயங்களில் சம்பிரதாயத்திற்காக இதையெல்லாம் சில நேரங்களில் செய்ய வேண்டியதாகி விடுகிறது. மக்கள் உரிமைகளுக்காகவும், அவர்களோடு உணர்வுப்பூர்வமாக இருக்க வேண்டும். என்னை அவர்களின் குடும்பத்தில் ஒருத்தராக நினைக்கும் ஒவ்வொருத்தருக்கும், தமிழ்நாட்டில் அவர்களுக்கு எங்கு, என்ன பிரச்சினை நடந்தாலும் அவர்களின் உரிமைகளுக்காகவும், அவர்களின் உணர்வுப்பூர்வமாக இருப்பேன். ஒரு வேளை திரு. அம்பேத்கர் இன்று உயிருடன் நம்முடன் இருந்தால் அவர் என்ன நினைப்பார். இன்றைய நம் இந்தியாவை நினைத்து அவர் வெட்கப்படுவாரா, பெருமைப்படுவாரா. ஒருவேளை வருத்தப்பட்டால் எதை நினைத்து வருத்தப்படுவார். இன்று நம் நாடு முழு வளர்ச்சி அடைய வேண்டுமெனில் ஜனநாயகம் காக்கப்பட வேண்டும். ஜனநாயகம் காக்கப்பட வேண்டும் என்றால் அரசியலமைப்பு சட்டம் காக்கப்பட வேண்டும். அதற்கான பொறுப்பு, கடமை நம் அனைவரிடமும் இருக்க வேண்டும் என்று தோன்றியது. அந்த பொறுப்போடும், கடமையோடும் தான் இதை கூறிக் கொள்கிறேன். ஜனநாயகத்தின் ஆனி வேர் சுதந்திரமான, நியாயமான தேர்தல். தேர்தல் நியாயமாக நடக்கவில்லை என்று நான் கூறவில்லை. ஆனால் தேர்தல் நியாயமாகவும், சுதந்திரமாகவும் தான் நடக்கிறது என்ற அசைக்க முடியாத நம்பிக்கை நம் ஒவ்வொரு இந்தியனுக்கும் இருக்க வேண்டும் என்று தோன்றியது. அது அமைய தேர்தல் ஆணையர்கள் ஒருமித்த கருத்து அடிப்படையில் மட்டும் தான் நியமிக்கப்பட வேண்டும் என்பதே என் வலிமையான கோரிக்கை. ஏப்ரல் 14, அண்ணல் அம்பேத்கரின் பிறந்தநாள். அன்று தான் நம் ஒட்டுமொத்த இந்தியர்களுக்கும் உரிமைகள் பிறந்த தினம். இதனால் அந்த தேதியை இந்தியர்களின் ஜனநாயக உரிமைகள் தினமாக அறிவிக்க வேண்டும் என்று தாழ்மையான வேண்டுகோள். இதை இந்திய ஒன்றிய அரசிடம் நான் முன்வைக்கிறேன் என்று தெரிவித்தார்.

Tags

Next Story