வருவாய் கோட்டாட்சியரின் மக்கள் குறைதீர் முகாம்
மக்கள் குறைதீர் முகாம்
நாமக்கல் மாவட்டம் மோளியப்பள்ளி ஊராட்சியில் கோட்டாட்சியரின் மக்கள் குறைதீர் முகாம் நடத்தப்பட்டது.
மாதந்தோறும் 2வது புதன் கிழமையில் மாவட்ட ஆட்சியரின் மக்கள் குறைதீர் முகாம் நடந்து வந்த நிலையில் வட்டாட்சியரின் ஏற்பாட்டில் 2வது புதன் கிழமை வட்ட அளவிலான ஒரு கிராமத்தை தேர்வு செய்து கோட்டாட்சியரின் குறைதீர் முகாம் நடத்த தமிழ்நாடு அரசு உத்தரவிட்டதன் படி இன்று திருச்செங்கோடு வட்டம் மாணிக்கம் பாளையம் குறுவட்டம் எலச்சிபாளையம் ஒன்றியம் மோளியப்பள்ளி ஊராட்சியில் கோட்டாட்சியரின் மக்கள் குறைதீர் முகாம் நடத்தப்பட்டது. வருவாய் கோட்டாட்சியர் சுகந்தி தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் திரு ஈ.ஆர்.ஈஸ்வரன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்,கூட்டத்தில் பல்வேறு துறைகளைச் சேர்ந்த அலுவலர்கள் அரசின் திட்டங்கள் குறித்து எடுத்துக் கூறினார்கள், விழாவில் பேசிய சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரன் கூறியதாவது அரசு மக்களைக் நிறைய திட்டங்களை தீட்டிய போதும் அது மக்களைச் சென்றடைகிறதா என்பதில் சந்தேகம் இன்னும் இருந்து வருகிறது,அதனை கலையும் வகையில் ஒவ்வொரு மாதம் இரண்டாவது புதன் கிழமையிலும் வருவாய் கோட்டாட்சியின் தலைமையில் மக்கள் குறைதீர் கூட்டம் நடத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது, வட்டத்திற்குட்பட்ட ஒவ்வொரு கிராமத்தில் உள்ள மக்களும் கலந்து கொண்டு தங்கள் குறைகளை தயக்கமின்றி எடுத்து கூறவும் உடனடி தீர்வு காணவும் இந்த முகாம்களில் நடவடிக்கை எடுக்கப்படும் முதல் கூட்டம் என்பதால் தற்போது புகார் மனுக்கள் பெறப்பட்டு அனைத்து புகார்களுக்கும் உடனடி தீர்வு அல்லது பதில் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது கூட்டத்திற்கு வரும் பொது மக்களின் எண்ணிக்கை இன்னும் கூடுதலாக இருக்க வேண்டும் எனவே அடுத்த கூட்டத்திற்கு பொதுமக்களை இருக்கும் வகையில் துண்டறிக்கைகள் ஒலிபெருக்கிகள் மூலம் அறிவிப்பு செய்து பொதுமக்களை முகாமிற்கு வரவழைக்க நடவடிக்கை எடுக்கப்படும் ஒரு கிராமத்திற்கு மட்டும் என நடக்கும் நிலையை மாற்றி குறைந்தது 4 கிராமங்களாக இருக்கும் வகையில் நடத்தினால் இன்னும் பயனுள்ளதாக இருக்கும் என எம் எல் ஏ கூறினார், நிகழ்ச்சியில் மோளியப் பள்ளி ஊராட்சித் தலைவர் அவர்கள் பூங்கொடி தமிழ்ச்செல்வன், திருச்செங்கோடு வட்டாட்சியர் விஜயகாந்த், எலச்சிபாளையம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அருளப்பன்,மலர்விழி மற்றும் விவசாயத் துறை தோட்டக்கலை துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் அலுவலர்கள் கிராம நிர்வாக அலுவலர் வருவாய் ஆய்வாளர் என பலரும் கலந்து கொண்டனர்
Next Story