பிரதமர் மோடியின் பேச்சு தவறாக திரித்து பரப்பப்படுகிறது: பாஜக

பிரதமர் மோடியின் பேச்சு தவறாக திரித்து பரப்பப்படுகிறது பாஜக செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் தனி செயலாளரும், பாஜக செய்தி தொடர்பாளருமான ஸ்ரீகாந்த் கருனேஷ் திருச்சி பாஜக அலுவலகத்தில் இன்று நிருபர்க ளுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர் மோடி பிரச்சாரத்தில் பேசிய பேச்சை தமிழ்நாட்டில் தவறாக திரித்து பரப்புகின்றனர்.

இஸ்லாமியர்களுக்கும் பெண்களுக்கு எதிராக பாஜக உள்ளது போன்ற தோற்றத்தை இந்தியா கூட்டணியினர் உண்டாக்குகின்றனர் இந்தியாவில் வம்சா வழியாக வாழுகின்ற சிறுபான்மையினரை அவர் குறிப்பிடவில்லை வெளியில் இருந்து ஆதாரம் இன்றி குடியேறி உள்ளவர்களையே வந்தேறி என்று குறிப்பிட்டுள்ளார்.

வெளிநாடுகளில் இருந்து மேற்குவங்கம் மூலமாக இந்தியாவில் நுழைகின்றார்கள். அவருடைய மக்கள் பெருக்கம் அதிக அளவில் வருகின்றனர் ஆவணங்கள் இல்லாமல் ஆதார் அட்டை வாங்கி விடுகின்றனர் இதைத்தான் அவர் குறிப்பிட்டார். தமிழகத்தில் பூஜ்ஜியத்தில் இருந்து ராஜ்ஜியம் அமைப்போம் என்று கூறினோம். ஒரு இடத்தில் வெற்றி பெற்றால் கூட பாஜகவுக்கு வெற்றி தான். எங்களுக்கு தமிழக மக்களின் யோகா வித்த ஆதரவுடன் அதிக வாக்கு சதவீதத்தை பெறுவோம் என அவர் கூறினார்.

Tags

Next Story