ஓய்வூதிய திட்டத்தை அறிவித்து அரசு ஊழியர்களின் வாழ்வில் ஒளியேற்றப்பட்டுள்ளது: அரசியல் கட்சி தலைவர்கள் வரவேற்பு

சிறப்பான ஓய்வூதியத் திட்டத்தை அறிவித்து அரசு ஊழியர்களின் வாழ்வில் ஒளியேற்றியுள்ளார் முதல்வர் மு.க.ஸ்டாலின் என்று அரசியல் கட்சி தலைவர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். பாமக நிறுவனர் ராமதாஸ்: தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டம்” எனும் புதிய திட்டத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் நலன் காக்கும் பல்வேறு அம்சங்கள் இடம்பெற்றுள்ளது வரவேற்கக்கூடியதே. குறிப்பாக மாநில அரசு அலுவலர்கள், ஊழியர்கள், ஆசிரியர்கள் பெறும் கடைசி மாத ஊதியத்தில் 50 சதவீதம் உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியமாக வழங்கப்படும் என்பதையும், பங்களிப்புடன் கூடிய ஓய்வூதிய திட்டத்தின் கீழ் பணியில் சேர்ந்து, புதிய ஓய்வூதிய திட்டம் செயல்படுத்துவதற்கு முன்னர் இடைப்பட்ட காலத்தில் ஓய்வூதியமின்றி பணி ஓய்வு பெற்றவர்களுக்கு சிறப்பு கருணை ஓய்வூதியும் வழங்கப்படும் என்பதையும் அரசு ஊழியர்கள் வரவேற்று மகிழ்கின்றனர்.
